ஓர் ஆணை முதல் முறை சந்திக்கும் போது, பெண்கள் நோட் செய்யும் 10 விஷயங்கள்
ஒரு பொண்ண பார்த்ததும் அந்த பொண்ணோட தலையில இருந்து கால் வரைக்கும் எல்லாமே பசங்க நோட்டீஸ் பண்ணுவாங்க.
ஆனா, இதே ஒரு பையன முதல் தடவையா பார்க்கும் போது, பொண்ணுங்க எதெல்லாம் நோட்டீஸ் பண்ணுவாங்கனு உங்களுக்கு தெரியுமா?
தோரணை!
ஆண்களுக்கு தோரணை மிகவும் அவசியம். ஓர் ஆணின் தோரணையை வைத்தே அவர் வீரமான ஆண்மகனா, சாதுவான குணாதியம் கொண்டவரா, கோபக்கார ஆளா என்று கண்டுபிடித்துவிடலாம். ஆகவே, முதலில் ஓர் ஆணை சந்திக்கும் போது அவரது தோரனையை உன்னிப்பாக கவனிக்கிறார்கள் பெண்கள்.
தோற்றம்!
தோரணைக்கு அடுத்து ஒருவரின் தோற்றத்தை வைத்து அவரது அன்றாட வாழ்க்கை மற்றும் செயல்பாடுகள் எத்தகையதாக இருக்கும் என்று கணக்கிட்டுவிடலாம். ஆகவே, தோரணைக்கு அடுத்து பெண்கள் பார்வையில் அடைப்படுவது தோற்றம்.
நடத்தை!
பெரும்பாலும், மூன்றாவதாக இடம்பெறும் இந்த நடத்தையை வைத்தே, அவருடன் எத்தகைய உறவை பேணிக் காக்க வேண்டும். அவருடனான உறவு, தொடர்பு எப்படியாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்துவிடுகிறார்கள். நடத்தை தானே, சமூகத்தில் நீங்கள் என்ற பிம்பத்தை வெளிப்படுத்துகிறது.
உடை!
பெண்கள் தோரணைக்கு அடுத்ததாக உன்னிப்பாக கவனிக்கும் விஷயம் உடை. நீங்கள் பழைய உடை அணிகிறீர்களா? புத்தாடை அணிகிறீர்களா என்பதல்ல கேள்வி, நீங்கள் உடுத்துன் உடையை நீட்டாக, பக்காவாக உடுத்துகிறீர்களா என்பதே பெண்களின் கவனத்தில் முக்கிய பங்கு கொல்கிறது.
சீர்!
சீர் என்றவுடன் திணற வேண்டாம். நீங்கள் எத்தனை சீர் கொண்டு வருவீர்கள் என்பதல்ல இந்த சீர். இந்த சீர், உங்கள் சிகை அலங்காரம் சீராக இருக்கிறது, உங்கள் உடை அலங்காரம் சீராக இருக்கிறது, நீங்கள் பயன்படுத்தும் accessories எனப்படும் அணிகலன்கள் சீராக உள்ளனவா என்பதை சரி பார்க்கும் சீர்.
நாற்றம்!
நாற்றம் என்றவுடன் அது கப்பு என்று பலர் எண்ணுகின்றனர். நாற்றம் என்பது பொதுச்சொல், துர்நாற்றம் என்றால் தான் மோசமான வாடை என்று அர்த்தம். ஆகவே, நாற்றம் என்பதை பொதுவாக smell என்ற பொருளே கொள்ள வேண்டும். அதாகப்பட்டது, உங்களிடம் நல்ல நாற்றம் / நறுமணம் இருக்கிறதா? என்று கவனிப்பார்கள். இது உங்களை மோப்பம் பிடிப்பதற்கு அல்ல, உங்கள் மீதானா சுகாதாரத்தை மோப்பம் பிடிக்க.
உடல்!
ஒல்லியா, குண்டா, தடிமனா, எப்படியான உடல்வாகு இருந்தால் அவனிடம் என்னென்ன மாதிரியான பழக்கவழக்கங்கள் எல்லாம் இருக்கலாம். அதனால் அவனிடம் எத்தைகைய பிரச்சனைகள் அல்லது உடல் ஆரோக்கியம் இருக்கும் என்றெல்லாம் கூட கவனிக்கிறார்கள்.
யாருடன்?
ஒருவேளை தாங்கள் சந்திக்கும் ஆண் வேறு யாருடனாவது வந்திருந்தால், உடன் வருவோர் குறித்தும் கவனிப்பார்கள். ஒருவேளை உடன் வந்த நபர் ஒரு பெண்ணாக இருந்தால், மிக உன்னிப்பாக அவர்களை கவனிப்பார்கள். அந்த பெண்ணுக்கும், இவனுக்கும் என்ன தொடர்பு இருக்கும் என்பது வரை யோசிப்பார்கள்.
சருமம்!
சருமம்… உடை போன்றது தான் சருமமும். நம் உடலில் இருக்கும் பெரிய பாகம் சருமம் தான். இங்கே பெண்கள் கவனிப்பது சருமம் கருப்பா, வெள்ளையா என்பதல்ல. பார்க்க பொலிவுடன் இருக்கிறாரா? இல்லையா? என்று கவனிக்கிறார்கள்.
குரல்!
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் என்று கூறுவார்களே… அதற்கு இது பொருத்தமாக இருக்கும். ஆம்! பெண்கள் ஆண்களிடம் வெளித் தோற்றத்தை காட்டிலும் குரலை மிகவும் விரும்புவார்கள். உண்மையில் பெண்களை அதிகம் ஈர்க்கும் விஷயங்களில் குரலும், அந்த குரலால் அவர்கள் என்ன பேசுகிறார்கள், எப்படி பேசுகிறார்கள் என்பது பெரும் பங்கு வகிக்கிறது.