ஆரோக்கியம்புதியவை

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா..? மீறி குடித்தால் உடலில் என்ன நடக்கும்…?

நீர்- நம் பூமியின் மிக முக்கிய ஆதாரம். நீரின்றி இங்கு எந்த ஜீவ ராசிகளாலும் உயிர் வாழ இயலாது. இப்படி தண்ணீருக்கென்றே பல மகத்துவகங்கள் உள்ளன. ஒரு சில நேரங்களில் தண்ணீரை குடிக்க கூடாது என்றே சொல்வார்கள்.குறிப்பாக விரதம் இருக்கும் போது, சாப்பாட்டிற்கு முன்பு அல்லது பின்பு, மயக்க நிலையில்… போன்ற ஏராளமான விஷயங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதில் ஒன்று தான், சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கமும். இது பலரின் கேள்விக்குறியாகவே இருக்கிறது. சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் என்னென்ன விளைவுகள் வரும் என்பதை இனி நாம் தெரிந்து கொள்வோம்.
நல்லதா..? கெட்டதா..?

நமக்கே தெரியாமல் நாம் பல்வேறு விஷயங்களை கடைபிடித்து வருகின்றோம். அவற்றில் பல நமது உடலுக்கு தீங்கை தருகிறது. உடலில் ஏற்படுகின்ற எண்ணற்ற மாற்றத்திற்கு இந்த பழக்க வழக்கங்களும் காரணமாக அமைந்து விடுகிறது. அது போன்ற ஒரு பழக்கம் தான் சாப்பிடும் போது நீர் அருந்துவது.

என்னதான் நடக்கிறது..?

நாம் சாப்பிட்ட உடனேயே உணவானது செரித்து விடாது. இதனை ஒரு பெரிய வேளையாக நம் உடல் செய்து வருகின்றது. அதாவது, நாம் உணவை மெல்லும் போது எச்சியுடன் இவை கலந்து வயிற்று பகுதிக்கு செல்கிறது. பிறகு இவற்றுடன் வயிற்றில் இருக்கும் அமிலங்களும் கலந்து கொள்கிறது.

4 மணி நேரமா..?
பிறகு இந்த உணவானது கிட்டத்தட்ட 4 மணி நேரம் செரிமானம் ஆக எடுத்து கொள்ளும். இறுதியாக இவை கூழ்மமான நிலைக்கு வந்து விடும். இப்போது தான், உடலுக்கு தேவையான சத்துக்களை அந்தந்த பாகங்களுக்கு அனுப்பப்படுகிறது. எனவே, நாம் சாப்பிடும் போது குடிக்கும் நீரானது அதிக நேரம் வயிற்றில் தங்குவது இல்லை.

தவறான கூற்றா..?

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கின்றது. இது சரியா..? தவறா..? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் தொப்பை போடும் என்றும், உடல் பருமனாகும் என்றும், செரிமான பிரச்சினை ஏற்படும் என்றும் பல கூற்றுகள் கூறப்படுகிறது.

செரிமான கோளாறு வருமா..?

தேவையற்ற உணவுகளை சாப்பிட்டால் தான் செரிமான கோளாறுகள் வர கூடும் என்பது நம்மில் பலருக்கு தெரிந்த உண்மைதான். ஆனால், தண்ணீர் குடித்தால் கூட செரிமான பிரச்சினை வருமா என்பதே கேள்வி. சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்சினை ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இன்சுலின் அளவை பாதிக்குமா..?

தண்ணீரை சாப்பிடும் போது குடித்தால் இன்சுலின் அளவு மாறுபாடு ஏற்படும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அத்துடன் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் அதிகரிக்க கூடும். ஆதலால், இந்த பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.

செரிமானத்தை அதிகரிக்குமா..?

பலருக்கு இருக்கும் ஒரு தவறான புரிதல் இதுதான். திரவமான பொருளை சாப்பிடும் போது குடித்தால் மிக வேகமாக செரிமானம் அடைந்து விடும் என்பதே. ஆனால் உண்மை என்னவென்றால், சாப்பிடும் போது திரவ பொருட்களை எடுத்து கொண்டால் அவை செரிமானத்தை வேகப்படுத்தாது.

அமில தன்மை மாறுமா..?

சாப்பிடும் போது நாம் தண்ணீர் குடித்தால் வயிற்றின் அமில தன்மை சற்றே மாறும் என சில ஆய்வுகள் சொல்கிறது. இதனால் தான் செரிமான பிரச்சினை பெரிதும் ஏற்பட்டு, உணவு சீராக ஜீரணம் ஆகாமல் இருக்கிறது.
காரமா..? உப்பா..?

எனவே, எந்த வகையான உணவாக இருந்தாலும் அவற்றில் சேர்க்கப்படும் காரமும், உப்பின் அளவும் மிக முக்கியமானதாகும். ஏனென்றால், இவைதான் நமக்கு நீரை குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொடுக்கிறது. ஆதலால், சீரான அளவில் இவற்றை உணவில் சேர்த்து உண்ணுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker