புதியவைவீடு-தோட்டம்

எப்படி சுத்தம் பண்ணாலும் உங்க கேஸ் ஸ்டவ் உடனே அழுக்காயிடுதா? இதோ சிம்பிள் ஐடியா

சமையலுக்கு பயன்படும் அடுப்பை எப்படி புதுசு போல் மின்ன வைப்பது எனத் தெரியுமா? அட போங்க நீங்க வேற! எப்படி தினமும் சுத்தம் பண்ணாலும் அடுத்த நாளே கன்றாவி ஆகிடுது என்று புலம்புபவரா நீங்க? கவலைய விடுங்க… காலையில் எழுந்து நேரம் ஒதுக்கி சமைச்சு எல்லாம் முடிச்சிட்டு உங்க கிச்சன பார்த்தா கண்டிப்பா கஷ்டமாத்தான் இருக்கும்.

பால் பொங்கின கறை, குழம்பு கறை என்று அடுப்பு முழுவதும் இருப்பது நீங்கள் எப்படி தேய்த்து சுத்தப் படுத்தினாலும் போகவே போகாது. அதிலும் எண்ணெய் பிசுக்கு போன்றவை அடுப்பைச் சுற்றி ஒட்டிக் கொண்டு பார்ப்பதற்கே உங்கள் கிச்சன் அழகையும் கெடுத்து விடும்.

கிச்சன்

சரி இதை சுத்தம் செய்யலாம் என்று முயன்றால் நேரம் விரயமானது தான் மிச்சம். பலன் எதுவும் கிடைக்காமல் தொந்தும் போய்விடுவீர்கள். சரி இந்த பிரச்சினைக்கு என்ன தான் செய்வது என்று யோசிக்கிறீர்களா? அதற்காகத்தான் உங்களுக்கு சில க்ளீனிங் டிப்ஸ்களை இங்கே கூற உள்ளோம். இந்த டிப்ஸ்களை கொண்டு சில நிமிடங்களிலேயே உங்கள் அடுப்பை எளிதாக க்ளீன் செய்து விடலாம்.




அமோனியா

உங்கள் அடுப்பில் உள்ள பர்னர்களை கழட்டி ஒரு சிப் லாப் கவரில் போட்டு கொள்ளுங்கள். அதனுள் கொஞ்சம் அம்மோனியா பொடியை தூவி இரவு முழுவதும் அப்படியே வைத்து விடுங்கள். அடுத்த நாள் காலையில் சிப்பை திறந்து பார்த்தால் பளபளக்கும் பர்னர்கள் ரெடியாகி இருக்கும்.

பேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு

இந்த முறையை செய்வதற்கு முன் அடுப்பின் மீதுள்ள தூசிகளை முதலில் துடைத்து எடுத்து விடுங்கள். பிறகு அதன் மேல் பேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடை தூவி விடுங்கள். கொஞ்சம் நேரம் கழிச்சு பாருங்க, அடுப்பில் தேங்கியிருந்த கடினமான கறைகள் கூட மாயமாய் மறைந்து போகும். பிறகு தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள். பிறகு காய்ந்ததும் அடுப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் புது அடுப்பு இப்பொழுது தயாராகி விடும்.

கொதித்த நீர்

இந்த முறையில் நாம் எந்த வித கெமிக்கல்களும் பயன்கடுத்தாமலயே அடுப்பை சுத்தம் செய்யலாம். சுடு நீரை கவனமாக அடுப்பின் மேற்பரப்பில் ஊற்றவும். கொஞ்சம் நேரம் அறை வெப்பநிலைக்கு குளிரும் வரை காத்திருங்கள்.




பிறகு துடைத்து விட்டு பாருங்கள் எண்ணெய் பிசுக்கு எல்லாம் போய் அடுப்பு பளபளக்கும். இன்னமும் லேசாக எண்ணெய் பிசுக்கு இருப்பதாக தெரிந்தால் கொஞ்சம் சோப்பு மற்றும் பஞ்சை பயன்படுத்தி துடைத்து எடுக்கவும். உங்களுக்கு கெமிக்கல் வாசனை பிடிக்காமல் இருந்தால் அதற்கு இந்த முறை மிகவும் சிறந்தது. மிகவும் எளிமையான முறை என்றாலும் பலன் கிடைக்கும்.

டிஷ் சோப்பு மற்றும் பேக்கிங் சோடா

ஒரு சிறிய பெளலில் டிஷ் சோப்பு மற்றும் பேக்கிங் சோடாவை எடுத்துக் கொள்ளுங்கள். டிஷ் சோப்பை நீங்கள் திட, திரவ மற்றும் பவுடர் இப்படி எந்த வடிவத்தில் வேண்டும் என்றாலும் பயன்படுத்தி கொள்ளலாம். இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு காட்டன் பஞ்சில் நனைத்து அடுப்பை நன்றாக துடைத்து எடுக்கவும். இதை பயன்படுத்திய பிறகு கலவை மீதம் இருந்தால் கண்டிப்பாக திரும்ப பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். காரணம் இதை நீண்ட நேரம் காற்றில் வைக்கும் போது நச்சாக மாறிவிடும். எனவே கலவையை ஸ்டோர் பண்ணி வைக்காதீர்கள்.

பிளேடுகள்

ரொம்ப இறுகிக் போய் இருக்கும் எண்ணெய் பசை க்கு இந்த முறை மிகவும் சிறப்பானது. இந்த முறையில் பிளேடை கையில் பிடித்துக் கொண்டு எண்ணெய் பசை இடத்தை சுரண்டி விடுங்கள். அப்புறம் ஒரு பஞ்சில் தண்ணீரை நனைத்து நன்றாக துடைத்து விடுங்கள். இதை செய்யும் எந்த வித கீறல்களும் அடுப்பில் ஏற்படாத வண்ணம் கவனமாக செய்ய வேண்டும்.




உப்பு மற்றும் பேக்கிங் சோடா

1 டேபிள் ஸ்பூன் தண்ணீர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். நன்றாக கலக்குங்கள். பிறகு இந்த கலவையை அடுப்பில் மீது தேய்த்து விடுங்கள். இந்த முறையில் நீங்கள் அதிக அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டாம். ஏனெனில் இது ஒரு இயற்கையான ஸ்க்ரப் மாதிரியே செயல்படும்.

வொயிட் வினிகர்

ஒரு ஸ்பிரே பாட்டிலில் 1/3 பங்கு வொயிட் வினிகர், 2/3 பங்கு தண்ணீர் கலந்து கொள்ளுங்கள். வினிகரில் உள்ள அசிடிட்டி தன்மை அடுப்பில் உள்ள எண்ணெய் பசையை நன்றாக போக்குகிறது. இந்த முறை ஒட்டுமொத்த அடுப்பையும் இரண்டு நிமிடங்களிலேயே க்ளீன் செய்து விடுகிறது.

பிறகு ஒரு பஞ்சை கொண்டு நன்றாக துடைத்து எடுங்கள். எல்லா அழுக்குகளும் வந்து விடும் அதே சமயம் உங்கள் அடுப்பும் புதியது போன்று ஜொலிக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker