சமையல் குறிப்புகள்புதியவை

ரவை கார பொங்கல் செய்வது எப்படி

ரவையில் பொங்கல் செய்தால் அருமையாக இருக்கும். செய்வதும் மிகவும் சுலபம். இன்று ரவையில் எப்படி பொங்கல் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்



ரவை – 2 கப்
பச்சைப் பருப்பு – அரை கப்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு

தாளிக்க:

நெய் – தேவையான அளவு
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
சீரகம் – 1 டீஸ்பூன்
முந்திரி – தேவையான அளவு
மிளகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை

செய்முறை :

முதலில் முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பைப் போட்டு வாசம் வர, சிவக்க வறுத்துக்கொள்ளவும். அதே வாணலியில் ரவையைப் போட்டு சூடு வர வறுத்துக்கொள்ளவும்.

அடுத்து பச்சைப் பருப்பை நன்றாகக் கழுவிவிட்டு அது வேகும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேக வைக்கவும்.

மீண்டும் வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை போட்டு தாளித்து, ஒரு கப் ரவைக்கு இரண்டே கால் கப் தண்ணீர் என ஊற்றி கொதி வரும்வரை மூடி வைக்கவும்.

தண்ணீர் கொதி வந்ததும் தேவையான உப்பு, வேக வைத்த பச்சைப் பருப்பு இவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.

மீண்டும் ஒரு கொதி வந்ததும் ரவையை சிறிதுசிறிதாகக் கொட்டி, கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். ரவை முழுவதையும் சேர்த்த பிறகு, நன்றாகக் கிளறிவிட்டு 2 டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும். இந்த சூட்டிலேயே ரவை வெந்துவிடும். நீண்ட நேரம் அடுப்பிலேயே இருந்தால் ரவை பொங்கலுக்குப் பதில் ரவை உப்புமாவாக மாறிவிடும்.

தேங்காய் சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker