அருமையான மட்டன் ஈரல் வறுவல்
தேவையான பொருட்கள் :
மட்டன் ஈரல் – 200 கிராம்,
வெங்காயம் – 2,
தக்காளி – 2,
பச்சை மிளகாய் – 4,
இஞ்சி பூண்டு – 2 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் – அரை தேக்கரண்டி,
மல்லித்தூள் – அரை தேக்கரண்டி,
மட்டன் மசாலா- 4 தேக்கரண்டி,
சோம்பு – அரை தேக்கரண்டி,
பட்டை – அரை தேக்கரண்டி,
எண்ணெய் – 5 தேக்கரண்டி,
கொத்தமல்லி, உப்பு – சிறிது.
செய்முறை :
தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டன் ஈரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெயில் ஊற்றி சூடானதும் பட்டை, சோம்பு, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக குழைய வெந்ததும் மட்டன் ஈரல், மிளகாய், மல்லித்தூள், மட்டன் மசாலா சேர்த்து, தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.