அருமையான மட்டன் ரோகன் ஜோஸ்
தேவையான பொருட்கள் :
மட்டன் – அரை கிலோ
கிராம்பு – 3
ஏலக்காய் – 5
இஞ்சி-பூண்டு விழுது – இரண்டு டேபிள்ஸ்பூன்
தயிர் – 3 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
மிளகாய்த்தூள் – இரண்டு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
அரைத்த தக்காளி விழுது – 100 மில்லி
முந்திரிப்பருப்பு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – 4 டீஸ்பூன்
செய்முறை :
மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி எண்ணெயில் வதக்கி ஆறியதும் மிக்சியில் அரைத்துகொள்ளவும்.
அடுத்து அதில் வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.
வெங்காய விழுது நன்றாக வதங்கியதும் அதில் மட்டன், தயிர், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
அனைத்து நன்றாக வதங்கி எண்ணெய் பிரிய ஆரம்பித்தவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
கலவை நன்றாக வெந்ததும் அதனுடன் தக்காளி விழுது சேர்த்து கொதிக்கவிடவும்.
பின்னர் முந்திரி விழுதைச் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.
கலவையை நன்கு கலக்கிவிட்டு, கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்.
10 நிமிடங்கள் வரை மூடி வைத்து மிதமான தீயில் வேகவிடவும்.
5-10 மில்லி வெண்ணீரில் குங்குமப்பூவை சேர்த்து நன்றாகக் கலக்கி, அந்நீரை அடுப்பில் இருக்கும் மட்டன் கலவையில் சேர்த்து நன்றாகக் கலக்கி, நறுக்கிய கொத்துமல்லித்தழையை தூவி இறக்கவும்.
சூப்பரான மட்டன் ரோகன் ஜோஸ் ரெடி.