சமையல் குறிப்புகள்

முட்டை உருளைக்கிழங்கு சாப்ஸ்

தேவையான பொருட்கள் :

  • முட்டை – 3,
  • உருளைக்கிழங்கு (பெரியது) – 2,
  • மிளகு – ஒரு டீஸ்பூன்,
  • சீரகம் – கால் டீஸ்பூன்,
  • பட்டை – 1,
  • சோம்பு – கால் டீஸ்பூன்,
  • இஞ்சி – ஒரு துண்டு,
  • பூண்டு – 6 பல்,
  • ரஸ்க் தூள் – 4 டீஸ்பூன்,
  • உப்பு – சுவைக்கேற்ப,
  • மஞ்சள்தூள் – சிறிதளவு,
  • எண்ணெய் – தேவையான அளவு.

 


செய்முறை:

  • உருளைக்கிழங்கை மண் போகக் கழுவி, தோல் நீக்கி விரல் நீளத்துக்கு நறுக்கிக்கொள்ளுங்கள்.
  • மிளகு, சீரகம், பட்டை, சோம்பு, இஞ்சி, பூண்டை மிக்சியில் போட்டு மசாலா தயாரித்துக்கொள்ளுங்கள்.
  • இந்த மசாலாவை உருளைக்கிழங்குடன் சேர்த்துப் பிசறி ஒரு பாத்திரத்தில் போட்டு, லேசாக தண்ணீர் தெளித்து, நன்றாக வேகவிடுங்கள்.
  • ஒரு கிண்ணத்தில் தேவையான உப்பு, சிறிது மஞ்சள்தூள் போட்டுக் கரைத்து, முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துவைத்துக்கொள்ளுங்கள்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலாவுடன் சேர்ந்து வெந்த உருளைக்கிழங்கு துண்டுகளை, முட்டையில் முக்கி, ரஸ்க் தூளில் போட்டுப் புரட்டி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.
  • குழந்தைகளின் வோட்டுகளை அள்ளும் சூப்பர் சாப்ஸ் இது.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker