வைட்டமின் ஈ குறைபாடு உள்ளதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள்
ஆரோக்கியமான உடலுக்கு வைட்டமின்களின் தேவை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். வைட்டமின்களில் பெரும்பாலும் வைட்டமின் ஏ, சி போன்றவை மட்டுமே முக்கியம் என்பது பரவலாக நிலவும் கருத்து ஆகும். ஆனால் அனைத்து வைட்டமின்களுமே உடலின் நன்மைக்கு அவசியம்தான்.
உடலுக்கு அவசியமான வைட்டமின்களில் முக்கியமான ஒரு வைட்டமின் ஈ ஆகும். நாள்பட்ட நோய்களை தடுப்பதில் வைட்டமின் ஈ முக்கியப்பங்கு வகிக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மேலும் இது நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகிறது. வைட்டமின் ஈ குறைபாடு பல குறைபாடுகளை உண்டாக்கும். இந்த பதிவில் வைட்டமின் ஈ குறைபாட்டால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் என்னென்ன ஏன்று பார்க்கலாம்.
வைட்டமின் ஈ நன்மைகள்
நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதில் வைட்டமின் ஈ முக்கியப்பங்கு வகிக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் உடலை பாதுகாப்பதில் முதன்மையானதாக இருக்கிறது. வைட்டமின் ஈ குறைபாடு உள்ளவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் அதேசமயம் இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் அதிகரிக்கிறது. வயது அதிகரிக்க அதிகரிக்க இது அதிகமாகும். உங்கள் உடலில் வைட்டமின் ஈ குறைபாடு உள்ளது என்பதற்கான அறிகுறிகளை கீழே பார்க்கலாம்.
நோயெதிர்ப்பு மண்டலத்தின் பலவீனம்
மேலே குறிப்பிட்டள்ளது போல வைட்டமின் ஈ நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஈ குறைபாடு நோயெதிர்ப்பு மண்டலம் பதிலளிப்பதை பாதித்து நோய் தூண்டும் காரணிகளை அதிகரிக்க செய்கிறது. வைட்டமின் ஈ குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக நோய் ஏற்படவும், நாள்பட்ட நோய்கள் அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.
பார்வை பிரச்சினைகள்
ஆய்வுகளின் படி வைட்டமின் ஈ குறைபாடு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுவதை தடுக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து வைட்டமின் ஈ நமது கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்று தெளிவாக புரிகிறது. வைட்டமின் ஈ போதுமான அளவு கிடைக்காதபோது அது பார்வைத்திறனை பாதிக்கும். இதனால் கண்களின் செல்கள் பாதிக்கப்படுகிறது.
தசைகள் வலுவின்மை
வைட்டமின் ஈ தசைகளை பலவீனமாக்குவதுடன் நாளடைவில் தசைகளை செயலிழக்கவும் செய்யக்கூடும். வைட்டமின் ஈ குறைபாடு தசைகளை பலவீனமாக்குவதுடன் அதன் இழப்பிற்கும் காரணமாகிறது. வைட்டமின் ஈ குறைபாடு உங்கள் தசை செல்களில் வைரஸ்கள் தாக்கத்தை அதிகரிக்கிறது. மேலும் வைட்டமின் ஈ குறைபாடு சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.
சமநிலை சிக்கல்கள்
வைட்டமின் ஈ குறைபாடு நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. நரம்பியல் நிபுணர்களின் கூற்றுப்படி வைட்டமின் ஈ குறைபாடு பாதத்தில் உள்ள நரம்புகளில் சீர்குலைவு, குறைவான உடல் ஒருங்கிணைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். வைட்டமின் ஈ குறைபாடு உள்ளவர்களுக்கு உடலியல் இயக்கங்களில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது.
மூளை கோளாறுகள்
மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுவது நமது மூளைதான். நிலைமை மோசமானால் வைட்டமின் E குறைபாடு நேரடியாக அடிப்படை அறிவாற்றல் செயல்பாட்டை பாதிக்கலாம். அதேசமயம் வைட்டமின் ஈ அதிகம் உள்ளவர்களின் புத்திகூர்மை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வைட்டமின் ஈ வயதானவர்களுக்கு ஏற்படும் அல்சைமர் நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.
செரிமான கோளாறுகள்
செரிமான பிரச்சினைகளை சரிசெய்ய வைட்டமின் ஈ மிகவும் அவசியமானது. வைட்டமின் ஈ குறைபாட்டுக்கும் செரிமான மண்டலத்துக்கும் நேரடியாக தொடர்பு இல்லாவிட்டாலும், வைட்டமின் ஈ குறைபாட்டை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மருத்துவர்கள் பெரும்பாலும் வைட்டமின் ஈ அதிகமுள்ள மாத்திரைகளை பரிந்துரைக்க காரணம் அதன் மருத்துவ முக்கியத்துவம்தான். ஒருவேளை உங்களுக்கு செரிமான பிரச்சினைகள் இருந்தால் வைட்டமின் ஈ அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள்.
சரும பிரச்சினைகள்
நமது சருமத்தின் குறிப்பிட்ட சவ்வுகள் எளிதில் கிருமிகளால் பாதிக்கப்படும், முக்கியமாக சருமத்தின் லிபிட் செல்கள் அதிகம் பாதிக்கப்படும். சரும சவ்வுகள் உள்புறம் மற்றும் வெளிப்புற தாக்குதல்களால் எளிதில் பாதிப்புடையக்கூடும் குறிப்பாக புறஊதா கதிர்கள் மற்றும் காற்று மாசுபாட்டால் பாதிக்கும். இந்த சரும கோளாறுகளை எளிதில் சரிசெய்ய வைட்டமின் ஈ பயன்படுகிறது.
வைட்டமின் ஈ உள்ள உணவுகள்
வைட்டமின் ஈ அதிகமுள்ள உணவுகள் மற்றும் மாத்திரைகளை சேர்த்து கொள்ளுங்கள். தானியங்கள், பச்சைக்காய்கறிகள், அவகேடா, சர்க்கரைவள்ளி கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவற்றில் வைட்டமின் ஈ அதிகமுள்ளது.