தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கான டயட்

தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கான டயட்

பாலூட்டும் தாய் தனது குழந்தைக்கும் சேர்த்து உணவை சாப்பிட வேண்டும். சத்தான உணவே ஆரோக்கியமான குழந்தைக்கு வழிவகுக்கும். தாய்மார்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

* ஓட்ஸ், முழு கோதுமை, கீன்வா, பார்லி, ரை மற்றும் இதுபோன்ற பல முழு தானியங்கள் வைட்டமின் பி மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்களின் முக்கியமான ஆதாரமாக இருக்கின்றன. குழந்தையைப் பராம ரிப்பதில் உடலுக்கு ஏற்படும் ஆற்றல் இழப்புகளை ஈடுசெய்ய உதவும். இவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உங்கள் உடலின் வளர்சிதை மாற்றமும் மேம்படும். அவை, ரத்த சர்க்கரை அளவுகளைக் குறைத்து, குடல் ஆரோக்கியமாக இருப்பதையும் உறுதிசெய்யும் – இவை எல்லாமே நல்ல தரமான பால் உற்பத்திக்கு வழி வகுக்கும்.





* பால் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளில் விதைகள் மிகவும் சிறந்தவையாகும். இந்திய பாரம்பரிய மரபு வழிமுறைகளில், பால் உற்பத்தியை மேம்படுத்த விதைகள் தலைமுறை தலைமுறையாக முக்கியமான விஷயமாகக் கூறப்பட்டு வந்திருக்கிறது. இவற்றில், வெந்தயம், சீரகம், எள் மற்றும் கசகசா போன்றவையும் அடங்கும்.

இவற்றை உங்களுடைய காலைநேர கஞ்சி, கறி வகைகளின் டாப்பிங்காக சேர்த்து அல்லது தினசரி ஒரு ஸ்பூன் அளவுக்கு அப்படியே சாப்பிட்டு வரலாம். வறுத்துப் பொடியாக்கிக் கொண்டும், மற்ற உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். தண்ணீரில் கலந்து குடிப்பது, நீர்ச்சத்தைப் பராமரிக்க உதவுவதோடு, உங்களுடைய மற்றும் உங்கள் குழந்தையின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவக்கூடியது.

சோம்பு, சீரகம் அல்லது வெந்தயத்தைப் பயன்படுத்தலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றை இரண்டு டீஸ்பூன்கள் எடுத்துக்கொண்டு, அரை லிட்டர் தண்ணீரில் சேர்த்து அதன் நிறமும் சுவையும் மாறும் வரை கொதிக்க வைக்கவும். தண்ணீரை ஆற வைத்து, வாட்டர் பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு குடிக்கலாம். சிறந்த முடிவுகளைப் பெற, இந்த விதைகளை தினமும் ஒருமுறையாவது குடிக்க வேண்டும்.

* தண்ணீரில் எந்தவொரு ஊட்டச்சத்தும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பல காரணங்களுக்காகத் தண்ணீர் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு அத்தியாவசியமானது. முதலில், நீர்ச்சத்து குறையாமல் இருக்கவும், உங்கள் உடலின் ஆற்றல் குறைந்துப்போகாமல் இருக்கவும் தண்ணீர் தேவை. இரண்டாவதாக, உடலின் பால் உற்பத்தியை தண்ணீர் அதிகரிக்கும். தாகம் எடுத்தால் உடனடியாகத் தண்ணீர் குடித்திடுங்கள், சோம்பல் காரணமாக ஒத்திப்போடவோ, வேறுவேலைகளால் குடிக்காமல் இருக்கவே கூடாது. ஃப்ரெஷ் சூப்கள், பழங்கள், காய்கறிகளின் ஜூஸ்கள் மற்றும் தேங்காய் தண்ணீர் போன்றவற்றையும் நிறைய எடுத்துக் கொள்ளலாம்.






* சிக்கன் மற்றும் வான்கோழி போன்ற இறைச்சிகள், தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு புரதச்சத்தை அதிகரிக்க உதவும். ஆனாலும், சிக்கனை அதன் தோல்நீக்காமல்தான் நீங்கள் சமைக்க வேண்டும். சிக்கன் தோலில் நிறையவே நல்ல விஷயங்கள் இருக்கின்றன. பார்ஸ்லே, பூண்டு, ஆலிவ் ஆயில் போன்றவற்றால் அதை ஃப்ளேவர் கூட்டி சாப்பிடலாம்.

புரதத்தின் நல்ல மூலமாக இருப்பதில் முட்டைகளும் மற்றொரு சிறந்த பொருள், புரதத்தைத் தவிர அதில், ஃபோலேட், வைட்டமின் பி12 ஆகியவையும் அதிக அளவில் உள்ளன. உங்கள் டயட்டில் போதுமான அளவு பி12 இல்லையென்றால், குழந்தைக்கும் அதேபோல குறைவு ஏற்படும் என்பதை மறக்காதீர்கள். இதை சரிசெய்ய முட்டைகள் சரியான வழிமுறையாகும்.

* முழுக்கொழுப்பு பால் பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்தது. தினமும் இரண்டு கிளாஸ் பாலைக் குடிப்பதால், புரதம் மற்றும் கால்சியம் போன்றவை அதிகரிக்கும். மேலும் இதில் “நல்ல கொழுப்பு” இருப்பதால், உடலில் ஏற்படும் ஆற்றல் குறைபாடுகளை ஈடுசெய்ய மிகவும் உதவுகிறது. மிகவும் சூடான அல்லது குளிர்ந்த பாலை விட, இதமான சூட்டில் உள்ள பால் எப்போதுமே சிறந்தது.

உங்களுக்கு மாட்டுப்பாலைச் செரிமானம் அடைவதில் சிக்கல் இருந்தால், ஆட்டுப்பாலை முயற்சி செய்து பாருங்கள். வீகன் உணவுமுறையில் இருப்பவர்கள், சோயா பால் அல்லது நட் மில்க் போன்றவற்றை முயற்சி செய்யலாம். இவற்றில் போதுமான அளவு ஊட்டச்சத்துகள் கிடைக்கும். குழந்தைப் பிறப்பும், பாலூட்டுதலும் எலும்புகளை பலவீனமாக்கும், அதனால் போதுமான அளவு பால் குடிப்பதால், எலும்புகளும் பற்களும் வலிமையாக இருக்கும்.






மேலும் குழந்தைக்கும் நல்லது. சீஸில் நல்ல கொழுப்புகள் இருக்கின்றன. தினமும் போதுமான அளவு ஊட்டச்சத்துகள் கிடைக்க, நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய மற்றும் ஒரு பால் தயாரிப்பு நெய் ஆகும். வீட்டில் தயாரிக்கும் நெய்யில், ஒமெகா 3 கொழுப்பு அமிலமான டிஎச்ஏ இருக்கிறது. இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது. இயற்கையான,கலப்படம் இல்லாத வெண்ணெயையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker