சமையல் குறிப்புகள்புதியவை
சீஸ் – நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச்
தேவையான பொருட்கள் :
நூடுல்ஸ் – கால் கப்,
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
தக்காளி – ஒன்று,
வெங்காயம் – ஒன்று,
இஞ்சி – ஒரு சிறு துண்டு,
பச்சை மிளகாய் – 2,
கேரட் – 1 சிறியது,
குடைமிளகாய் – பாதி,
தக்காளி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்,
சீஸ் துருவல் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
வெங்காயம், தக்காளி, இஞ்சி, குடைமிளகாய், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நூடுல்ஸை வேக வைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் போட்டு உருகியதும் இஞ்சி, ப.மிளகாய் போட்டு வதக்கிய பின்னர் வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் கேரட், குடைமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.
காய்கறி வதங்கியதும் வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்துக் கலக்கவும்.
அடுத்து அதில் தக்காளி சாஸ் விட்டு கலக்கவும்.
ஒரு ஸ்லைஸ் பிரெட் எடுத்து அதன் நடுவில், 2 டேபிள்ஸ்பூன் அளவு நூடுல்ஸ் கலவையை பரவலாக வைத்து, அதன் மேல் சீஸ் தூவி, மேலே ஒரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடி பரிமாறவும்.