ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

மனிதனை நிமிர வைத்த முதுகெலும்பு பற்றி அரிய தகவல்கள்

மனிதனை நிமிர வைத்த முதுகெலும்பு பற்றி அரிய தகவல்கள்

உயிரினங்களில் மனிதன் மட்டுமே நிமிர்ந்து நடைபோடுகிறான். தண்டுவடம் தரையில் படும்படி மல்லார்ந்து படுத்து தூங்குகிறான். நமது முதுகெலும்பே நம்மை நிமிர்ந்து நிற்கச் செய்கிறது. வயது மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ப முதுகெலும்பு சுருங்கிவிரியும் திறன் கொண்டது. வயதான காலத்தில் இது சுருக்கம் அடைவதால் தான் தாத்தா, பாட்டிகள் குனிந்து நடைபோடுகிறார்கள். இளமைப்பருவத் தைவிட உயரம் குறைந்துவிடுகிறார்கள். முதுகெலும்பைப் பற்றிய சில தகவல்களை இந்த வாரம் அறிந்து கொள்வோமா குட்டீஸ்…

* மனிதன் மட்டுமே செங்குத்தான முதுகெலும்பு கொண்டுள்ளான். இது அவன் நிமிர்ந்து நடைபோட காரணமாக இருக்கிறது. செங்குத்தாக இருந்தாலும், நமது முதுகெலும்பு 4 இடங்களில் வளைவு கொண்டிருப்பது குறிப்பிடத்க்கது. பெங்குயின்கள், சில குரங்கினங்கள் போன்றவை ஏறத்தாழ மனிதனைப்போல செங்குத்தான முதுகெலும்பு கொண்டிருக்கின்றன. பெரும்பாலான விலங்கினங்கள், கிடைமட்டமான, வளைந்த முதுகெலும்புகளையே பெற்றிருக்கின்றன.






* நாம் பிறக்கும்போதே முதுகெலும்பு நல்ல வளர்ச்சி கண்டிருக்கும். அப்போது முதுகெலும்பில் 33 தனிப்பட்ட எலும்புகள் காணப்படும். இந்த 33 எலும்புகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும். பெரியவர்களாக முதிர்ச்சி அடைந்ததும் 26 எலும்புகளாக மாறிவிடும். சில எலும்புகள் ஒன்றிணைவதால் இந்த மாற்றம் நிகழ்கிறது.

* முதுகெலும்பின் அடிப்புறத்தில் இணைந்திருக்கும் முதல் நான்கு எலும்புகள் சிறு வால்போல வளைந்த தோற்றத்துடன் காணப்படும். இவை ‘காக்சிக்ஸ்’ எனப்படுகிறது.

* அதற்கு மேலுள்ள 5 இணைந்த எலும்புகள் ‘சக்ரம்’ எனப்படுகிறது. அடுத்த 5 எலும்புகள் இணைந்த பகுதி ‘லாம்பர்’ எனப்படுகிறது.

* லாம்பரைத் தொடர்ந்து ஏறத்தாழ செங்குத்தாக அமைந்த 12 எலும்புகள் இணைந்த பகுதி ‘தோராசிக்’ எனப்படுகிறது. அடுத் ததாக உச்சியில் கழுத்திற்கு நேர் பின்னால் அமைந்துள்ள 7 இணைந்த எலும்புப் பகுதியை ‘செர்விகல்’ என அழைக்கிறார்கள்.

* மனிதனைத் தவிர ஒட்டகச் சிவிங்கி, ஒட்டகம்ஆகியவற்றுக்கு மட்டுமே கழுத்து முதுகெலும்பு எண்ணிக்கை 7 என்ற எண்ணிக்கையில் உள்ளது.

* செர்விகல் முதுகெலும்பு தலைப்பகுதியை தாங்கும் அமைப்பாகவும் செயல்படுவதால் இதை ‘அட்லஸ் எலும்பு’ என்றும் கூறுவது உண்டு. கிரேக்க நம்பிக்கைப்படி உலகை தாங்கி நிற்கும் கடவுளாக அட்லஸ் கருதப்படுவதால் இதற்கு அந்த பெயர் ஏற்பட்டதாக சொல்வது உண்டு.

* முதுகெலும்பில் 120 தசைகள் உள்ளன. 220 தசை நார்கள் அவற்றை முதுகெலும்புடன் இணைக்கிறது. இந்த இணைப்பே முதுகெலும்பிற்கு உறுதித்தன்மை தருகிறது. நரம்புகள் முதுகெலும்புடன் இணையவும், உணர்வுகள் கடத்தப்படவும் இது துணைபுரிகிறது.






* நூற்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருப்பதால் முதுகெலும்பு நல்ல நெகிழ்வுத் தன்மையுடன் வளைந்து கொடுக்கிறது. இதுவே நமது பல்வேறு இயக்கத்திற்கு அடிப்படையாகவும் அமைகிறது.

* நாம் நன்கு வில்போல வளைவதால் ஒரு வட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு வளைவை உருவாக்கும் அளவுக்கு முதுகெலும்பு வளைந்து கொடுக்கக்கூடியதாகும். இது அதன் நெகிழ்வுத்தன்மையின் பலத்தை காட்டுகிறது.

* இவ்வளவு நெகிழ்வுத்தன்மை கொண்டிருந்தாலும் அது உறுதியானது. 100 கிலோவுக்கு மேலான எடையையும், அழுத்தத்தையும் தாங்கும் திறன்கொண்டது முதுகெலும்பு.

* முதுகெலும்பில் இருந்து குருத்தெலும்பு உருவாகிறது. பஞ்சு போன்ற இந்த எலும்பு தண்டுவடத்துடன் இணைந்ததாக அதன் பின்னால் அமைந்திருக்கும்.

* குருத்தெலும்பு வளர்ச்சி அடையக்கூடியதாகும். ஈர்ப்புவிசை இல்லாத விண்வெளியில் இது வேகமாக விரிவடையும். விண்வெளியில் நீண்டகாலம் தங்கியிருந்து திரும்புபவர் உயரம் அதிகரித்திருப்பதற்கு குருத்தெலும்பு விரிவடைந்திருப்பதே காரணமாகும்.

* முதுகுவலி பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் உடல்பாதிப்புகளில் ஒன்றாகும். அமெரிக்கர்களில் 80 சதவீதம் பேருக்கு முதுகுவலி இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இது அவர்களின் வாழ்க்கை முறையால் ஏற்படும் பாதிப்பாக கருதப்படுகிறது.






* பெரும்பாலான முதுகுவலி பிரச்சினைகளுக்கு (சுமார் 80 சதவீதம்) சிகிச்சை தேவையில்லை. தானாக ஓரிரு மாதங்களில் சரியாகிவிடும். அப்படி சரியாகாமல் தொடரும் முதுகுவலி மற்றும் கடுமையான பிரச்சினை களுக்கு மருத்துவர்களின் சிகிச்சையை நாடலாம்.

* விபத்துகளில் ஏற்படும் தண்டுவட அதிர்ச்சியால் அதிகமானவர்கள் முதுகுவலியை எதிர்கொள்கிறார்கள். பெரும்பாலும் லாம்பர் பகுதியில்தான் முதுகுவலி ஏற்படுகிறது.

* ஒருவர் காலையிலும், மாலையிலும் உயரம் கூடி குறைவதற்கு தண்டுவடத்தில் ஏற்படும் நீட்சியும், தளர்ச்சியும் காரணமாகும்.

* புகைப்பழக்கம், நுரையீரல் மட்டுமல்லாது முதுகெலும்பையும் தீவிரமாக பாதிக்கக்கூடியது. புற்று நோய், தண்டுவட உறுதி குறைவது, முதுகுவலி உள்பட பல பின்விளைவுகளை அது உருவாக்கலாம்.

* தண்டுவட சிகிச்சை அளிப்பதற்கான ரோபோக்கள் தயாராகி வருகின்றன.






* முதுகுத்தண்டு வலிமையாக இருந்தால் ஞாபக சக்தியும் நன்றாக இருக்கும். இளம் வயதில் தண்டு வடத்திற்கும், முதுகு தசைகளுக்கும் நன்கு பயிற்சி அளித்து கவனித்துக் கொண் டால் முதுகெலும்பு நலம் பெறுவதுடன், நாமும் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் நிமிர்ந்து நடைபோடலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker