தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்கள்

தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்கள்

உலகத்திலேயே கலப்படம் இல்லாத பால் தாய்ப்பால். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வாழ்நாள் முழுவதும் சத்து குறைபாட்டில் கஷ்டப்படுகிறார்கள். ஆண்டுக்கு 2 1/2 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. இதில் 40 சதவீத குழந்தைகள் எடை குறைவாக பிறக்கின்றன. 8 சதவீத குழந்தைகள் மிகவும் மெலிந்தும், எலும்பும் தோலுமாக பிறக்கின்றன. 30 சதவீத குழந்தைகள் உயரம் குறைவாக பிறக்கின்றன.

தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. தாய்ப்பால் அவசியம் அதன் நன்மைகள் குறித்து கூடுதல் பேராசிரியரும், குழந்தைகள் நல மருத்துவருமான டி.குணசிங் விளக்கம் அளித்துள்ளார். அவை வருமாறு:

தாய்ப்பாலூட்டுவது என்றால் முதல் 6 மாதத்திற்கு (180 நாட்கள்) தாய்ப்பால் மட்டுமே தருவதும் பின் இணை உணவுகளுடன் இரண்டு வயது வரை அல்லது அதற்கு மேலும் தொடர்ந்து தாய்ப்பாலூட்டுவதுமேயாகும். தாய்ப்பால் எல்லா சத்துக்களும் உடைய ஒரு முழுமையான உணவாகும். தாய்ப்பாலில் நோயை எதிர்க்க கூடிய சக்தி உள்ளதால் குழந்தையை எந்த நோயும் நெருங்காது. தாய்ப்பாலில் மூ­ளை வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் உள்ளன. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் மிகவும் அறிவுள்ள குழந்தைகளாக விளங்குகிறது.

தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிப்பது எப்போது?


குழந்தை பிறந்தவுடன் ஈரத்தை துணியால் துடைத்து விட்டு தாயிடம் கொடுக்க வேண்டும். தாய் குழந்தையை உடலோடு சேர்த்து அனைத்து பிறந்தவுடன் பால் தர வேண்டும். பிறந்தவுடன் தாய்ப்பால் தர முடியாத சூழ்நிலையில் அதிகபட்சம் அரைமணி நேரத்திற்குள் கட்டாயம் தாய்ப்பால் தரவேண்டும். பிறந்தவுடன் குழந்தையை குளிப்பாட்டக்கூடாது. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பின்னரே குளிப்பாட்ட வேண்டும்.

ஏன் குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?

குழந்தை பிறந்தவுடன் சுறுசுறுப்பாகவும் விழிப்புடனும், பால் சப்புவதற்கு ஆவலாகவும் இருக்கும். எனவே குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பது எளிதாகிறது. பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் குழந்தை தூங்கி விடும். அதன்பின் பால் கொடுப்பதற்கு சிரமம் ஏற்படும்.

குழந்தை பிறந்தவுடன் குளுக்கோஸ் தண்ணீர், தேன், கழுதைப்பால் போன்றவை கொடுக்கலாமா?

குழந்தை பிறந்தவுடன் சுரக்கும்பால் “சீம்பால்” என்று கூறுகிறோம். இது மஞ்சள் நிறத்தில், கட்டியாக இருக்கும். இதில் குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் முழுமையாக உள்ளது. முதல் 3 அல்லது 4 நாட்களுக்கு சுரக்கும் சீம்பால் குழந்தைக்கு போதுமானதாகும். குளுக்கோஸ், தேன் போன்றவைகள் கொடுப்ப தால் குழந்தைக்கு தொற்று நோய் வருவதற் கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றது. மேலும் குழந்தைக்கு பசி அடங்கி பால் சப்பிட மறுத்து விடும். இதனால் தாய்க்கு பால் கட்டி பிரச்சினைகள் ஏற்பட்டு தாய்ப்பால் கொடுப்பதற்கு பல இடையூறுகள் ஏற்படுகின்றது. ஆகவே பிறந்தவுடன் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைக்கு எப்படி பால் கொடுப்பது?

தாய் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து அறைக்கு வந்தவுடன் மயக்கம் தெளிந்த நிலையில் தாய் படுக்கையில் படுத்த நலையிலேயே செவிலியர், உறவினர்கள் குழந்தையை மார்போடு அனைத்து தாய்ப்பால் கொடுக்க உதவி செய்ய வேண்டும். அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்குள் கட்டாயம் கொடுக்க வேண்டும். வேறு எந்தவித உணவும், பாலும் கொடுக்கக்கூடாது.

குழந்தைக்கு தண்ணீர், கிரைப்வாட்டர் கொடுக்கலாமா?

குழந்தை பிறந்த 6 மாதங்கள் முடியும்வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பாலிலே குழந் தைக்கு வேண்டிய தண்ணீர் உள்ளது. ஆகவே குழந்தைக்கு கோடை காலத்தில் கூட தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கிரைப்வாட்டர் ஜீரணத்திற்காக கொடுக்க வேண்டும் என்று ஒரு நம்பிக்கை மக்களிடையே உள்ளது. தாய்ப்பால் மிகவும் எளிதில் ஜீரணமாகின்ற ஒரு உணவாகும். ஆகவே கிரைப்வாட்டர் கொடுப்பதால் எந்த பயனும் கிடையாது. மேலும் அது கொடுப்பதால் பாக்டீரியா தொற்று வருவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.
குழந்தைக்கு தாய்ப்பால் எப்பொழுதெல்லாம் தர வேண்டும்?

குழந்தைக்கு குறைந்தது ஒரு நாளைக்கு எட்டு முறையாவது தாய்ப்பால் தரவேண்டும். அழும்போதெல்லாம் மற்றும் இரவு பகல் எல்லா நேரத்திலும் தர வேண்டும். இரவில் குறைந்தது 2 முறையாவது தர வேண்டும். குழந்தை 4 மணி நேரத்திற்கு மேல் தூங்கிக் கொண்டிருந்தால் அதை எழுப்பி பால் கொடுக்க வேண்டும். சில குழந்தைகள் குறைவான முறைகளும் சில குழந்தைகள் 15 தைல் 20 முறைகளும் பால் குடிக்கும்.

குழந்தை தேவையான அளவு தாய்ப் பால் குடிக்கிறதா? என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

ஒரு நாளில் குழந்தைக்கு குறைந்தது 8 முறையாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தை குறைந்தது ஆறு முறையாவது சாதாரண நிறத்தில் சிறுநீர் கழித்தால், தாய்ப்பால் போதிய அளவு கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். குழந்தை மாதா மாதம் குறைந்தது 500 கிராம் எடை கூடினாலும் குழந்தைக்கு தாய்ப்பால் சரியான அளவில் கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

குறைமாத குழந்தை, எடை குறைவான குழந்தைக்குக்கூட 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே போதுமானதா?

ஆம், குறை மாத குழந்தை மற்றும் எடை குறைவான குழந்தைகளுக்கு 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே போதுமானதாகும்.

தாய் நோய்வாய் பட்டிருக்கும் போது மற்றும் மருந்துகள் சாப்பிடும் போது தாய்ப்பால் கொடுக்கலாமா?

பெரும்பான்மையான சமயங்களில் தாய்ப்பால் கொடுக்கலாம். அதுதான சமயங்களில் (உதாரணம்: தாய் புற்று நோய்க்கு மருந்து சாப்பிடுதல்) மட்டுமே தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலை ஏற்படலாம். இச்சமயங்களில் தாய்ப்பாலூட்டு பயிற்சி பெற்ற மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று நடந்து கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு பேதி ஏற்படும்போது தாய்ப்பால் கொடுக்கலாமா?

கட்டாயம் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குழந்தையை பேதியிலிருந்து காப்பாற்றும்.

குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்றால் என்ன செய்வது?

தாய்ப்பால் போதவில்லை என்பது பேதைமையே. தைலில் தாய்ப்பால் கிடைக்கிறதா என சரி பார்க்க வேண்டும். சரியான அளவில் (500 கிராம் மாதம்) எடை கூடி உள்ளதா என சரிபார்க்க வேண்டும். குறைந்தது 6 முறையாவது சிறுநீர் கழிக்கிறதா என சரிபார்க்க வேண்டும். (வேறு எந்த உணவோ, பாலோ, தண்ணீரோ கொடுக்காத நிலையில்) தாய்ப்பால் சரியான அளவு கிடைக்கவில்லை எனில், கீழ்க்கண்டவற்றை சரிபார்க்க.

* குறைந்தது 8 முறையாவது சப்புகிறதா?
* பகல்-இரவு எல்லா நேரத்திலும் தாய்ப்பால் கொடுக்கப்படுகிறதா?
* புட்டிப்பால், சூப்பான் உபயோகிக்கப்படுகிறதா?

* வேறு பாலோ, உணவோ கொடுக்கப்படுகிறதா?

* குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போது சரியான நிலையில் சப்பும் நிலை மற்றும் ஒட்டுதல் உள்ளதா?


மேற்கூறியவற்றில் பிரச்சனை இருந்தால் அதை நிவர்த்தி செய்ய வேண்டும். தாய்க்கு ஒரு சந்தோஷமான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க வேண்டும். தாய்க்கு தன்னம்பிக்கை கொடுப்பது குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரது கடமையாகும்.

தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கு என்ன செய்வது?

குழந்தை எவ்வளவு சப்புகிறதோ அந்த அளவு பால் ஊறும். ஆகவே குழந்தை அதிக அளவு சப்ப வைத்தால் அதிக அளவு ஊறும். மேலும் தாய் நம்பிக்கையுடன் கொடுத்தால் தாய்ப்பால் கட்டாயம் தேவையான அளவு சுரக்கும்.

குழந்தை பால் போதாமல் அழுது கொண்டே இருக்கிறதே?

குழந்தை பசிக்காக மட்டுமே அழுவதில்லை. வேறு பல காரணங்களுக்காகவும் அழுகின்றது. ஆகவே ஏற்கனவே கூறியபடி தாய்ப்பால் போது மானதாக கிடைக்கிறதா என சரி பார்க்கவும். தாயிடம் குழந்தை எடை தேவையான அளவு கூடியிருப்பதை கூறி தாய்ப்பால் தேவையான அளவு கிடைப்பதை சொல்லி நம்பிக்கை ஊட்ட வேண்டும்.

குழந்தை அழுகையை நிறுத்துவதற்கு குழந்தை தாலாட்டவும், தோளில் போட்டு தட்டி கொடுக்கவும், வயிற்றில் கையால் சிறிதாக அழுத்தவும், உடை மாற்றவும், மற்றும் இடத்தை மாற்றி பார்க்கவும் அல்லது மருத்துவரின் ஆலோசனையுடன் வயிற்றுவலி மருந்து கொடுக்கலாம்.

புட்டிபால் கொடுக்கலாமா?

கட்டாயம் கொடுக்க கூடாது. இதனால் குழந்தைக்கு சப்புவதில் குழப்பம் ஏற்பட்டு சிறிது நாளில் தாய்ப்பால் குடிப்பதை படிப்படியாக குறைத்து நிறுத்தி விடும். குழந்தை சப்பாத நிலையில் தாய்ப்பால் சுரப்பது படிப்படியாக குறைந்து நின்று விடும். மேலும் புட்டிபால் கொடுப்பதால் கிருமி தொற்று, பேதி, நிமோனியா ஏற்படவும் வாய்ப் புள்ளது. ஆகவே புட்டிப்பால் வேண்டவே வேண்டாம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பாலாடையோ, கரண்டியோ உபயோகிக்கலாம்.


தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறைந்து விடுமா?

தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பெண்களுக்கு அழகு குறையாது. அழகு கூடத்தான் செய்யும். உடல் மெலிந்து ‘சிலிம்’ஆக காணப்படுவார்கள். தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்தால் மார்பக புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் நோய் பாதிப்பில் இருந்து தப்பித்து ஆரோக்கியமாக வாழலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker