ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்

பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்

உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால், நாம் அவற்றை காட்டி மருத்துவரிடம் பரிசோதிப்போம். அதற்கான மருந்துகளை உபயோகிப்போம். ஆனால், அந்தரங்க பகுதியில் ஏற்படும் நோய் தொற்றை பற்றி மற்றவரிடமோ அல்லது மருத்துவரிடமோ கூற தயக்கம் ஏற்படும். பெண்கள் தங்களின் பிறப்புறுப்பை பகுதியை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் அந்தரங்க பகுதியில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட்டால், அது இனப்பெருக்க மண்டலத்தை பாதித்து, பிரச்சனையை ஏற்படுத்தும்.






பிறப்புறுப்பு பகுதியில் காற்றோட்டம் குறைவாக இருக்கும். அதனால் எளிதில் கிருமிகளால் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடலில் அழகை மேம்படுத்த பலவற்றை செய்யும் பெண்கள், அவர்களின் அந்தரங்க பகுதி சுத்தத்தை மறந்துவிடுகிறார்கள்.

பிறப்புறுப்பு பகுதி ஆரோக்கியமாக இல்லை என்றால், நோய் தொற்றுகளால் மலட்டு தன்மை மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்படும். அந்தரங்க பகுதியில் நோய் தொற்றை தவிர்க்க உண்ண வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.
முழு தானியங்களில் உள்ள சத்துக்கள், யோனியின் சுவர்களில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியைத் தூண்டி, தொற்றுகள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும்.

எலுமிச்சையில் சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்திருப்பதால் நோய் தொற்றை தவிர்க்கும். எலுமிச்சை டீயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி போன்றவை அந்தரங்க உறுப்பின் ஆரோக்கியத்திற்குத் அவசியமான சத்துக்கள் இதிலிருந்து கிடைக்கின்றன.

தயிரில் உள்ள புரோபயோடிக்குகள், யோனியின் சுவர்களில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கும். உடலை குளிச்சியுடன் வைக்கவும் உதவுகிறது.






சால்மன் மீனில், உடலுறவின் போது யோனியின் சுவர்கள் வறட்சியடையாமல் ஈரப்பசையுடன் இருக்கத் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. மேலும், இது மூளை வளர்ச்சிக்கும், அறிவாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.

முட்டையில் புரதம் மற்றும் வைட்டமின் டி சத்து உள்ளது. இது பிறப்புறுப்பில் ஏற்படும் பல நோய்த்தொற்றுகளைத் தடுக்க பெரிதும் உதவுகின்றன.

அவகேடோ பழத்திலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இதுவும் அந்தரங்க உறுப்பில் உள்ள செல்களுக்கு ஊட்டமளித்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை எதிர்க்கவும், வளர்ச்சி அடையாமல் தவிர்க்கவும் உதவுகின்றன.






ஸ்ட்ராபெர்ரியில் அந்தரங்க உறுப்பு ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இவை மைக்ரோபியல் தொற்றுகள், ஈஸ்ட் தொற்றுகள் மற்றும் அந்தரங்க உறுப்பில் ஏற்படும் வறட்சியை தவிர்க்க உதவுகிறது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker