தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை
குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை
குழந்தைக்கு எவ்வளவு பால் கொடுக்க வேண்டும் என்பதை பற்றிய கவலை எப்போதுமே நமக்குத் தேவையில்லை. போதுமான அளவு பால் குடித்ததும் குழந்தை தானாகவே குடிப்பதை நிறுத்தி கொள்ளும். தாய்ப்பால் கொடுப்பதற்கும் புட்டிப்பால் கொடுப்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. ஆனால் குழந்தை தாய்ப்பால் குடிக்கும்பொழுது சில உடலசைவுகள், சைகைகள் மூலம் அவர்களுக்கு என்ன வேண்டும் என தாய்க்கு உணர்த்திவிடும். ஆனால் புட்டிப்பால் குடிக்கும்பொழுது, குழந்தைகளிடம் சில விஷயங்களில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தை பால் குடித்து முடித்த பின்னர் குழந்தையை தோள் மீது கிடத்தி அல்லது மடியில் நேராக உட்கார வைத்து மெதுவாக அதன் முதுகில் தட்டி கொடுங்கள். குழந்தை ஏப்பம் விரட்டும்.
குழந்தை பால் குடித்து முடித்த பின்னர் குழந்தையை தோள் மீது கிடத்தி அல்லது மடியில் நேராக உட்கார வைத்து மெதுவாக அதன் முதுகில் தட்டி கொடுங்கள். குழந்தை ஏப்பம் விரட்டும்.
பாட்டில் பால் குடிக்கும் குழந்தைக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படும். குறைவாக பால் குடிக்கும் குழந்தைக்கும் மலச்சிக்கல் வரும். இதை தவிர்ப்பதற்கு குழந்தைக்கு சரியான விகிதத்தில் பால் புகட்டுவது, போதுமான தண்ணீர் கொடுப்பது நல்லது.
குழந்தை குடித்து முடித்த பால் புட்டியை திறந்து, தண்ணீரில் கழுவாமல் அப்படியே சூடாக இருக்கும் வெந்நீரில் போட வேண்டும். புட்டியில் இருக்கும் பால் வெந்நீரில் கலந்து அது வெண்மையாகும். பின் அந்த புட்டியை எடுத்து பச்சைத்தண்ணீர் விட்டு நன்கு அலச வேண்டும்.