ஆரோக்கியம்புதியவை

இந்த ஒரே ஒரு பொருள் அக்குள் கருமையை விரைவில் போக்கும் எனத் தெரியுமா?

உங்கள் அக்குள் கருமையாக இருப்பதால், ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து செல்ல கூச்சமாக உள்ளதா? உங்கள் அக்குளை வெள்ளையாக்குவதற்கான வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் தமிழ் போல்ட் ஸ்கை வீட்டில் உள்ள ஒரு அற்புதமான ப்ளீச்சிங் தன்மைக் கொண்ட பொருளைக் கொண்டு எப்படி அக்குள் கருமையைப் போக்குவது என கொடுத்துள்ளது. அது வேறொன்றும் இல்லை, வீட்டில் உள்ள பேக்கிங் சோடா தான். சமையலில் பயன்படுத்தும் பேக்கிங் சோடாவை அழகுப் பராமரிப்பு பொருளாகவும் பயன்படுத்தலாம். சொல்லபோனால் பேக்கிங் சோடா கொண்டு சருமத்தில் உள்ள கருமையைப் போக்க முயற்சித்தால், நிச்சயம் விரைவில் நல்ல பலனைக் காண முடியும். அக்குள் பகுதி கருமையாக இருப்பதற்கு இறந்த செல்களின் தேக்கம் மற்றும் ஷேவிங் முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.

பேக்கிங் சோடா அக்குளில் உள்ள கருமையான சரும செல்களை நீக்கி, வெள்ளையாக்கும். மேலும் இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளதால், நோய்த்தொற்றுக்களின் தாக்கத்தில் இருந்தும் பாதுகாப்பளித்து, அக்குள் பகுதியை ஆரோக்கியமாகவும், வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளும். சரி, இப்போது பேக்கிங் சோடாவை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், அக்குளில் உள்ள கருமையைப் போக்கலாம் என பார்ப்போம். அவற்றில் உங்களால் முடித்த ஏதேனும் ஒரு வழியைப் பின்பற்றி, உங்கள் அக்குளை வெள்ளையாக்குங்கள். குறிப்பு: எந்த ஒரு வழியை முயற்சிக்கும் முன்பும், அவற்றை கையின் ஒரு ஓரத்தில் சிறிது தடவி ஊற வைத்து பரிசோதித்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்கு அலர்ஜி போன்று ஏதேனும் ஏற்பட்டால், வேறொரு முறையைத் தேர்ந்தெடுத்துங்கள்.



பேக்கிங் சோடா பேஸ்ட் எப்படி பயன்படுத்துவது? * ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 2 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்துக் கொள்ளுங்கள். * பின் அதை நன்கு கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்யுங்கள். * 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் அக்குளைக் கழுவுங்கள். எவ்வளவு முறை பயன்படுத்துவது? இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை பயன்படுத்தி வருவதன் மூலம், அக்குள் கருமை நீங்கி அக்குள் வெள்ளையாகி இருப்பதைக் காணலாம். பேக்கிங் சோடா மற்றும் தேங்காய் எண்ணெய் எப்படி பயன்படுத்துவது? * ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 3-4 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை நன்கு கலந்து, அக்குளில் தடவ வேண்டும். * பின்பு சில நிமிடங்கள் மென்மையாக தேய்த்து, 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * இறுதியில் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். எவ்வளவு முறை பயன்படுத்துவது? இந்த முறையை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்துவது நல்லது. இதனால் நிச்சயம் அக்குள் கருமை அகலும். பேக்கிங் சோடா மற்றும் கிளிசரின் எப்படி பயன்படுத்துவது? * ஒரு சிறிய கிண்ணத்தில் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1 டீஸ்பூன் கிளிசரின் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரை எடுத்துக் கொள்ள வேண்டும். * பின் அதை நன்கு கலந்து, அக்குளில் தடவ வேண்டும். * பின்பு 15 நிமிடம் கழித்து, கிளின்சர் பயன்படுத்தி அக்குளைக் கழுவ வேண்டும். எவ்வளவு முறை பயன்படுத்துவது? இந்த செயல்முறையை ஒருவரது வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வர, கருமையான அக்குள் வெள்ளையாகிவிடும். பேக்கிங் சோடா, கார்ன் ஸ்டார்ச் மற்றும் வைட்டமின் ஈ ஆயில் எப்படி பயன்படுத்துவது?



* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா, 1 டீஸ்பூன் கார்ன் ஸ்டார்ச் மற்றும் 2 வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பின்பு அந்த கலவையை அக்குள் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும். * பின் சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து, 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். * இறுதியில் வெதுவெதுப்பான நீரால் அக்குளைக் கழுவ வேண்டும். எவ்வளவு முறை பயன்படுத்துவது? இந்த முறையை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், அக்குளில் இருந்த கருமை மாயமாய் மறைந்துவிடும். பேக்கிங் சோடா மற்றும் பால் எப்படி பயன்படுத்துவது? * ஒரு பௌலில் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 2-3 டேபிள் ஸ்பூன் பச்சை பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். * பின் அதை நன்கு கலந்து, அக்குளில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். * பின்பு வெதுவெதுப்பான நீரால் அக்குளைக் கழுவ வேண்டும். எவ்வளவு முறை பயன்படுத்துவது? இந்த செயல்முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், கருப்பாக இருந்த அக்குள் சீக்கிரம் வெள்ளையாகிவிடும். பேக்கிங் சோடா மற்றும் வெள்ளரிக்காய் எப்படி பயன்படுத்துவது?



* ஒரு சிறிய பௌலில் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 2-3 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்ட் சேர்த்துக் கொள்ள வேண்டும். * பின் அதை நன்கு கலந்து, அக்குள் பகுதியில் தடவ வேண்டும். * இறுதியில் 15-20 நிமிடம் கழித்து, நீரால் அக்குளை நன்கு தேய்த்துக் கழுவுங்கள். எவ்வளவு முறை பயன்படுத்துவது? இந்த செயலை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த, அசிங்கமான அக்குள் அழகாகும். பேக்கிங் சோடா மற்றும் அவகேடோ எப்படி பயன்படுத்துவது? * நன்கு கனிந்த அவகேடோ பழத்தை எடுத்து சிறிது மசித்துக் கொள்ள வேண்டும். * பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, அக்குளில் தடவ வேண்டும். * 20 நிமிடம் நன்கு காயந்த பின், கிளின்சர் பயன்படுத்தி, அக்குளைக் கழுவ வேண்டும். எவ்வளவு முறை பயன்படுத்துவது? இந்த முறையை மாதத்திற்கு 2 முறை பின்பற்ற வேண்டும். இதனால் உங்கள் கருப்பான அக்குள் வெள்ளையாகிவிடும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker