சமையல் குறிப்புகள்புதியவை
சூப்பரான பேபி கார்ன் வறுவல்
தேவையான பொருட்கள்:
பேபிகார்ன் – 500 கிராம்,
மல்லித்தூள் – 10 கிராம்,
அரிசி மாவு – 10 கிராம்,
இஞ்சி-பூண்டு விழுது – 10 கிராம்,
எலுமிச்சைச் சாறு – 1 பழம்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பேபி கார்னை கை விரல் அளவில் நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெட்டப்பட்ட பேபிகார்னுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பகோடா போல, பேபிகார்ன் கலவையை பொரித்தெடுத்தால்… பேபி கார்ன் வறுவல் ரெடி.
கூடுதல் ஸ்பைசியாக வேண்டும் என்றால், வறுவலின் மீது சாட் மசாலா தூவிக்கொள்ளலாம்!