கர்ப்ப காலத்தில் வரும் மஞ்சள் காமாலை – காரணமும், தீர்வும்
உஷ்ணச்சூடு இவைகளாலும் பித்தம் அதிகரித்து காமாலை நோயைத் தோற்றுவிக்கிறது. மேலும் மலச்சிக்கல், மன அமைதியின்மை, வீண்பயம், திடீர் உணர்ச்சிவசப்படுதல், கோபம் இவைகளாலும் பித்தம் அதிகரித்து காமாலை நோய் உண்டாவதற்கு வாய்ப்பாகிறது.
மேற்கண்ட காரணங்களால் கர்ப்பிணிப் பெண்களுக்கு காமாலை நோய் ஏற்பட்டு தாயையும், சேயையும் பாதிக்கிறது. பித்த நீர் மிகுவதற்கு முக்கியக் காரணம் ஈரல்தான். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஈரல் பாதிப்புற்றால் குழந்தைகள் நலமின்றி பிறக்க வாய்ப்புள்ளது. இந்த ஈரல் பாதிப்பை ஈரல் உணக்கநோய் என்று கூறுவர்.
பொதுவாக மஞ்சள் காமாலை நோய்க்கு ஈரலைப் பலப்படுத்துவதற்கான மருந்துகள் உட்கொள்ளும் போது மஞ்சள் காமாலை நோயின் பாதிப்பிலிருந்து விடுபட வைக்கிறது. பிற மருத்துவ முறைகளிலும் ஈரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்துகள் இல்லாததால் ஈரல் உணக்க நோயை குணப்படுத்த வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.
ஈரலைப் பலப்படுத்தினாலே மஞ்சள் காமாலை நோயின் பாதிப்பிலிருந்து விடுபடலாம். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் பழ வகைகளை சாறு எடுத்து அதிகமாக உட்கொள்வது நல்லது. அதிக காரம், புளிப்பு, இனிப்பு போன்றவற்றை தவிர்த்து மிதமான காரம், புளிப்பு, இனிப்பு கலந்து சாப்பிட வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான ஓய்வு அவசியம்.
மெதுவான நடைப்பயிற்சி, அதனுடன் முடிந்த அளவுக்கு வீட்டு வேலைகள் செய்து வந்தால், காமாலை நோயிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான குழந்தையை சுகப் பிரசவமாக பெற்றுக்கொள்ளலாம். உணவில் கீரை வகைகளை அதிகம் சேர்த்து பித்தநீர் அதிகரிப்பைத் தடுத்துவிடலாம்.