அழகு..அழகு..புதியவை

இப்படி பருக்கள் வர உங்க முடிதான் காரணம்னு உங்களுக்கு தெரியுமா?… எப்படினு தெரிஞ்சிக்கோங்க

உங்களுக்கு வரும் பருக்களுக்கும் தலைமுடிக்கும் என்ன சம்பந்தம் வாங்க தெரிஞ்சுக்கலாம்.

நம் முகத்தில் வரும் பருக்களுக்கு நாமும் என்னென்வோ செய்து பார்ப்போம். ஆனால் எந்த வித தீர்வும் கிடைக்காது. இதுக்கு முக்கிய காரணமே பருக்கள் எதனால் வருகிறது என்பது பற்றி தெரியாமல் இருப்பதே. உங்களுக்கு ஒன்று தெரியுமா? நம் தலைமுடியால் கூட பருக்கள் ஏற்படும் என்பது தான் உண்மை. அது எப்படி ஏற்படுகிறது என்பதை பற்றி தான் நாம் இக்கட்டுரையில் பேச உள்ளோம்.


பருக்கள் ஏற்படக் காரணங்கள்

தூசிகள் மற்றும் மாசுக்கள்

நாம் வெளியே செல்லும் போது சருமத்தில் படும் மாசுக்கள், தூசிகள் போன்றவற்றாலும் பருக்கள் ஏற்படுகிறது. இதை சுத்தமான நீர் கொண்டு உங்கள் முகத்தை கழுவதன் மூலம் தடுக்கலாம்.

இறந்த செல்கள்

சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களால் கூட பருக்கள் தோன்றும். எனவே இறந்த செல்களை அடிக்கடி நீக்கி விட வேண்டும். ஸ்க்ரப் பயன்படுத்தி முகத்தை தேய்த்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.


கூந்தல் எப்படி பருக்கள் ஏற்படக் காரணமாகிறது முதலில் பருக்கள் தோன்றுவதற்கான உண்மையான காரணத்தை நாம் கண்டறிய வேண்டும். அப்பொழுது தான் நமக்கு எளிதாக தீர்வு கிடைக்கும். நம் கூந்தலால் பருக்கள் எப்படி உண்டாகிறது என்பது பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

நெற்றி முடிகள்

உங்கள் கூந்தல் எண்ணெய் பசை கூந்தலாக இருந்தால் நீங்கள் பங்க் ஹேர் ஸ்டைல் போன்றவற்றை வைக்க யோசிக்க வேண்டும். ஏனெனில் இந்த முடிப் பகுதிகளில் அதிகமாக வேர்க்கும் போது நெற்றி போன்ற இடங்களில் பருக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எண்ணெய் பசை கூந்தலாக இருந்தால் நெற்றியில் முடி விடுவதை தவிருங்கள்.


உடற்பயிற்சிக்கு பிறகு குளிக்காமல் இருத்தல்

உடற்பயிற்சி செய்த பிறகு நாம் பெரும்பாலும் குளிப்பதில்லை. இதனால் கூந்தலில் ஏற்படும் வியர்வையால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு பருக்கள் உண்டாகிறது. மேலும் இந்த வியர்வை சரும துளைகளை அடைத்து எரிச்சல், அரிப்பு பருக்கள் போன்றவற்றை ஏற்படுத்தி விடுகிறது.

பொடுகு தொல்லை

தலையில் இருக்கும் பொடுகு உதிர்ந்து ஆடைகள் சருமத்தில் படுவதால் கூட பருக்கள் ஏற்படலாம். எனவே முதலில் பொடுகு தொல்லை யை சரி செய்வதன் மூலம் பருக்களை தடுக்கலாம். இதற்கு ஆன்டி டான்ட்ரவ் சாம்பு பயன்படுத்துங்கள்.

அதிக வெப்பமான ஹேர் ஸ்டைலிங் கருவி

கூந்தலுக்கு பயன்படுத்தும் ஹேர் ஸ்டைலிங் பொருட்கள், கருவிகள் போன்றவை சருமத்தில் படும் போது பருக்கள் ஏற்படுகிறது. உங்கள் ஹேர் ஸ்டைலிங் பொருட்கள் அதிக எண்ணெய் தன்மையுடன் இருந்தால் சரும துளைகளை அடைத்து பருக்களை ஏற்படுத்துகிறது. எனவே கூந்தல் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தும் போது முகத்தில் படாம வண்ணம் பயன்படுத்தவும்.


ப்ளோ ட்ரையர் கருவி

நீங்கள் அவசர அவசரமாக கிளம்பி அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்றால் உடனே கூந்தலை காய வைக்க ப்ளோ ட்ரையர் கருவியை பயன்படுத்துவீர்கள். இந்த ப்ளோ ட்ரையர் உங்கள் கூந்தலை வறட்சியாக்கி விடும். இதனால் கூந்தலின் ஈரப்பதத்தை சமன் செய்ய அதிகமான எண்ணெய் சீரம் இயற்கையாகவே தலையில் சுரக்க ஆரம்பித்து விடும். இந்த சீரம் சருமத்தில் படும் போது பருக்கள் ஏற்படுகிறது.

கூந்தல் பராமரிப்பு

நாம் தினமும் கூந்தலை பராமரிக்க நிறைய கெமிக்கல்கள் நிறைந்த பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். கண்டிஷனர், பெட்ரோலியம் ஜெல் போன்றவை சருமத்தில் உள்ள துளைகளை அடைத்து பருக்களை உருவாக்கி விடுகிறது. எனவே இந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களை குறைந்த அளவில் முக சருமத்தில் படாதவாறு பயன்படுத்தி வந்தால் பருக்கள் வருவதை தடுக்கலாம்.

எனவே உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் கூந்தலையும் சருமத்தையும் சரி சமமாக பராமரிப்பது மிகவும் முக்கியம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker