ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

இதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..!

பொதுவாகவே எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் பழங்களில் உள்ளது. ஒவ்வொரு பழங்களும் பல்வேறு நன்மைகளை நமக்கு தர வல்லது. பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடல் ஆரோக்கியத்தை நலமாக வைக்க உதவுகிறது. குறிப்பாக ஒவ்வொரு பழங்களின் நிறங்களும் தனி தன்மை வாய்ந்தது. அதிலும் சிவப்பு நிற பழத்திற்கென்றே பிரத்தியேக தன்மை உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


அவை இதயத்தின் முழு நலனையும் பேணி காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறதாம். இந்த பதிவில் இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ளும் ஒரு சில முக்கிய பழங்களை பற்றி தெரிந்து கொண்டு நம் உடல் நலத்தையும் பராமரிப்போம்.

புரட்சிகரமான சிவப்பு நிறம்…!

பொதுவாக சிவப்பு நிறத்தை புரட்சிகரமான நிறமாக மக்கள் கருதுவார்கள். இது போன்ற புரட்சியை செய்ய வேண்டுமென்றாலும், நமக்கு உடலில் அதிக வலிமை தேவைப்படும். உடலின் வலிமையை முழுமையாக காக்கிறது இந்த சிவப்பு நிறத்தை கொண்ட பழங்கள். 40 சதவீதம் இதய நோய்களை ஏற்படாமல் இவை காக்குமாம்.

இதயமும் சிவப்பும்…

நம் உடலின் முதன்மையான உறுப்புகளில் இதயமும் ஒன்று. ஒவ்வொரு உறுப்பிற்கும் அதனுடைய தன்மைக்கேற்ப ஒவ்வொரு சிறப்பு பழங்கள் உள்ளன. அந்த வகையில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள் இவைதான்.


ஆப்பிள்

தக்காளி

மாதுளை

கிரான்பெரிஸ்

செர்ரி

தர்பூசணி

ராஸ்பெரிஸ்

கிரேப் ப்ரூட்

ஸ்ட்ராவ்பெர்ரி

ஆப்பிள்

“தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை” என்ற ஒரு வழக்கு மொழி இருந்து வருகிறது. இது உண்மையும் கூட. இவை LDL என்ற கெட்ட கொலெஸ்ட்ரோல்களை முற்றிலுமாக குறைத்து விடும் தன்மை கொண்டவை. எனவே, இவை இதய நோயை தடுத்து விடும்.

தக்காளி

லிகோபின் (lycopene) என்ற முக்கிய மூல பொருள் தக்காளியில் உள்ளது. ஆண்களுக்கு ஏற்பட கூடிய பிறப்புறுப்பு புற்றுநோயை இது தடுக்க கூடிய ஆற்றல் பெற்றது. இவற்றில் அதிக அளவில் உள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி இதய நோய்கள் உருவாவதை தடுக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மாதுளை

ரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ள இந்த மாதுளை பெரிதும் உதவுகிறது. புனிக்காலஜின்ஸ் (Punicalagins) என்ற முக்கிய ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மாதுளையில் உள்ளது. அத்துடன் பொட்டாசியமும் இதில் ஏராளமாகவே இருப்பதால் இதயத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ளும்.


தர்பூசணி

கெட்ட கொலெஸ்ட்ரோலான LDL என்பதை குறைக்க கூடிய ஆற்றல் இந்த தர்பூசணியிற்கு உள்ளது. மேலும் ஆண்களுக்கு உருவாக கூடிய ப்ரோஸ்டேட் புற்றுநோயை இவை தடுக்கும். ரத்த நாளங்களை சீராக வைத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கும்.

கிரான்பெரிஸ்

உடலின் செயல்பாட்டை செம்மைப்படுத்த கிரான்பெரிஸ் பயன்படுகிறது. இவை சிறுநீர் பாதையில் உருவாக கூடிய H pylori என்ற நோய் தொற்றுக்களை ஏற்படாமல் தடுக்கும். கிரான்பெரிஸை சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படாமல் நீண்ட நாள் வாழலாம்.

செர்ரி

பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி செர்ரி பழங்களில் அதிகம் உள்ளது. எனவே, சாப்பிட கூடிய முக்கிய பழ வகைகளில் இதுவும் இடம் பெற்றால் உங்களின் இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும், இவற்றில் நார்சத்து அதிகம் இருப்பதால் செரிமான கோளாறுகள் வராமல் பார்த்து கொள்ளும்.

ரெஸ்பிபெரிஸ்

இந்த சிவப்பு நிற பழம் நம் உடல் வலிமையை அதிகரிக்க உதவும். இவை உடலில் சேர கூடிய கெட்ட கொழுப்புகளை உடனடியாக நீக்கி விடும். இதனால், எளிதில் இதய நோய்கள் ஏற்படுவதை தடுத்து விடும். இதனை யோகர்ட் சேர்த்து அரைத்து குடித்தால் மிக ருசியாக இருக்குமாம்.


கிரேப் ப்ரூட்

இந்த பழம், உடலில் உள்ள கொலெஸ்ட்ரோலின் அளவை முற்றிலுமாக குறைத்து நன்மை தரும். இவற்றில் அதிகமான அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி இருக்கிறது. எனவே எதிர்ப்பு சக்தியை கூட்டி உடல் வலிமை அதிகரிக்க செய்யும்.

ஸ்ட்ராவ்பெர்ரி

இது HDL என்ற நல்ல கொலஸ்ட்ரோலை உடலில் அதிகரிக்க செய்யும். இந்த சிவப்பு நிற பழம், புற்றுநோய் செல்கள் உருவாவதையும் தடுக்கும். ரத்த அழுத்தத்தை குறைத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கும். மேலும், இவற்றில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்காக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker