ஆரோக்கியம்புதியவை

மனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி

மனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி

வாரத்தில் மூன்று முதல் 5 நாட்கள், 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது மன நலத்திற்கு நன்மை சேர்க்கும் என்பது ஆய்வுத்தகவல். அமெரிக்கா வின் யேல் பல்கலைக்கழகம், மாசசூடெட்ஸ் மருத்துவமனை, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், மூளை சம்பந்தமான ஆராய்ச்சி நடத்தும் லோரிசெட் இன்ஸ்டி டியூட் ஆகியவை இணைந்து 10 லட்சம் பேரிடம் ஆய்வு செய்து இதை கண்டறிந்திருக்கிறது.


குழந்தைகள் பராமரிப்பு, வீட்டுவேலை, ஓட்டப்பந்தயம், சைக்கிள் ஓட்டுவது, மீன் பிடிப்பது, பனிச்சறுக்கு விளையா ட்டு, குழு விளையாட்டுகள் உள்பட 75 வகையான உடற்பயிற் சிகளை மேற்கொள்பவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக் கிறார்கள். வயதோ, பாலினமோ கருத்தில் கொள்ளப்படவில்லை. எந்த வயதினராக இருந்தாலும் அதற்கு ஏற்றபடியான உடற்பயிற்சி செய்வது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் இதயநோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு போன்ற அபாயங்களை குறைக்கலாம் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. உடற்பயிற்சி எதுவும் செய்யாதவர்கள் மாதத்தில் 11 நாட்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்றால் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்த பாதிப்பு 7 நாட்களாக குறையும் என்பதும் தெரியவந்திருக்கிறது.குறைந்த பட்சம் வாரம் 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது ஆய்வாளர்களின் பரிந்துரையாக இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை 30 முதல் 60 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்து வருவது உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் நலம் சேர்க்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker