பொடுகுத் தொல்லையில் இருந்து விடுதலைத் தரும் ஆயுர்வேதம்
* எலுமிச்சையில் உள்ள அமிலம், ஸ்கால்ப்பில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் மற்றும் தேங்காய் எண்ணெய் ஸ்கால்ப்பிற்கு ஈரப்பசையூட்டும். எனவே இந்த கலவையைக் கொண்டு பொடுகைப் போக்க முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* ஆயுர்வேதத்தின் படி, வினிகர் பொடுகைப் போக்கும் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வினிகர் ஸ்கால்ப்பை ஈரப்பசையூட்டவும் செய்கிறது. ஒரு கப்பில் சிறிது வினிகரை எடுத்து, அதனை ஒரு பஞ்சு பயன்படுத்தி ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.
* வெந்தயம் மயிர்கால்களை வலிமையடையச் செய்வதோடு, ஊட்டமளித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் வெந்தயத்தில் உள்ள கசப்புத்தன்மை ஸ்கால்ப்பில் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுத்து, முடி உதிர்வதையும் தடுக்கும். இரவில் படுக்கும் முன் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி 45 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.
* மிளகுத் தூளும் ஓர் அற்புதமான பொடுகைப் போட்டும் பொருள். இதில் உள்ள காரத்தன்மை நுண்கிருமிகள் மற்றும் பூஞ்சைகளை அழித்து, பொடுகு ஏற்படுவதைத் தடுத்து, ஸ்கால்ப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். சிறிது வால் மிளகை பொடி செய்து, நீரில் அல்லது தேங்காய் எண்ணெயில் கலந்து ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.