தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

கர்ப்ப காலத்தில் வயிறு பெரிதாக இருப்பதற்கான காரணங்கள்

கர்ப்ப காலத்தில் வயிறு பெரிதாக இருப்பதற்கான காரணங்கள்

சில கர்ப்பிணிகளுக்கு வயிறு பெரியதாக இருக்கும். பொதுவாக நம் ஊரில் வயிறு பெரிதாக இருந்தால் பெண் குழந்தை எனச் சொல்வதுண்டு. உண்மையில் இது மட்டும்தான் காரணமா? இல்லை வயிறு பெரியதாக இருக்க நிறைய காரணங்கள் உள்ளன. வயிறு பெரிதாக இருந்தாலோ சின்னதாக இருந்தாலோ பயம் வேண்டாம். அது பொருட்டல்ல. குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதே முக்கியம்.


* முதல் முறை கர்ப்பமான பிறகு, குழந்தையை பெற்றெடுத்த பின் வயிற்றுத் தசைகள் இயல்பான முறையில் பழைய படி சேர்ந்திருக்காது. சற்று தளர்வாகவே இருக்கும். முதல் குழந்தைக்கு பிறகு, வெகு விரைவிலே இரண்டாவது முறை தாயானால் வயிறு பெரியதாக இருக்கும். பெரும்பாலோனோருக்கு இரண்டாம் முறை தாயானால், வயிறு பெரிதாக இருக்கும். இது நார்மல்தான்.

* ஆம்நியாடிக் திரவம் வயிற்றுக்குள் இருக்கும். அதில்தான் குழந்தை மிதந்து கொண்டிருக்கும். இந்தத் திரவம் அதிக அளவில் இருந்தால் வயிறு பெரிதாக தெரியும். நார்மலான அளவு 800-1000 மி.லி. இந்த அளவைவிட 2 லிட்டர் அதிகமாக இருந்தால், தாயானவள் கொஞ்சம் அசௌகரியமாக உணரக் கூடும். இந்தப் பிரச்னையை மருத்துவர்கள் பார்த்துக்கொள்வார்கள். எனவே பயப்பட வேண்டாம். இது அதிகமாக இருப்பதற்கு, எதாவது சின்ன சின்ன காரணங்கள் இருக்கலாம். அதை மருத்துவர்கள் சரி செய்துவிடுவார்கள்.
* பொதுவாக இரண்டாவது முறை தாயானவர்கள், இந்தத் தவறை அதிகம் செய்வார்கள். தேதி தவறாக கணக்கிட்டு இருப்பீர்கள். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மீண்டும் கருவுற்றால் கரு கணித்த தேதியைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம்தான்.

* முதல் முறையாகக் கர்ப்பமான பிறகும் குழந்தை பிறந்த பிறகும் வயிற்றுத் தசைகள் நார்மலாக மீண்டும் இறுக்கமாகியிருக்காது. முதல் கர்ப்பம்போல சரியான அளவில் இல்லாமல் சற்று கீழ் இறங்கி வயிறு காணப்படும். இதனால் குழந்தையின் நிலையும் மாறி இருக்கலாம். இதன் காரணமாக வயிறு பெரிதாக தெரியும்.


* தாய் உட்காருவது, நிற்பது, நடப்பது ஆகியவை சரியான நிலையில் இல்லை என்றாலும் வயிற்று தசைகள் தளர்ந்து வயிறு பெரிதாக தெரியலாம். இதன் காரணமாகவும் வயிறு பெரிதாக இருக்கும்.

* டிவின்ஸ் அல்லது அதற்கு மேல் குழந்தைகள் இருந்தால் வயிறு பெரிதாக தெரியும். வயிற்று தசைகள் குழந்தைகளுக்கு ஏற்றதுபோல தளர்வடையும்; பெரிதாகும். ஆதலால் வயிறு பெரிதாக தெரியும்.

* குழந்தையின் அளவு பெரிதாக இருந்தால், வயிறு பெரிதாக இருக்கும். கர்ப்பமாக இருக்கும்போது கர்ப்பக்கால சர்க்கரை நோய் இருந்தால், குழந்தை பெரிதாக இருக்கும். ஆதலால் வயிறும் பெரிதாகும். கர்ப்பக்கால சர்க்கரை நோய் உள்ள தாய்மார்கள், கொஞ்சம் கூடுதல் கவனமும் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்வதும் முக்கியம். ஸ்கேன்களும் கொஞ்சம் கூடுதலாக எடுக்க வேண்டி இருக்கும். உங்கள் குழந்தையின் வளர்ச்சியை அடிக்கடி பரிசோதிக்க வேண்டி இருக்கும்.

* அதிகமான ஆம்னியாட்டிக் திரவமோ கர்ப்பக்கால சர்க்கரை நோயோ இருந்தால் பாலிஹைட்ராமினாஸ் வரலாம். வயிறு இயல்புக்கு மீறி பெரிதாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏதாவது பிரச்னை என்றால் ரத்த பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் போன்ற பரிசோதனைகள் மூலம் தெரிந்துவிடும். மருத்துவர்கள் பார்த்துக்கொள்வார்கள். தைரியமாக இருங்கள்.


* முதல் குழந்தை பிறந்த பின், நீங்கள் மீண்டும் சரியான உடல் எடையை சீராக பராமரிக்காமல் தவற விட்டு மீண்டும் கர்ப்பமாகி இருக்கலாம். இதனாலும் வயிறு பெரிதாக தெரியும். உங்கள் இடுப்பை சுற்றி தசைகள் தளர்ந்து தொங்கலாம். இதனாலும் வயிறு பெரிதாக இருக்கும். முதல் முறை தாயான பிறகு 4-5 ஆண்டுகளாவது இடைவேளி விட்டு அடுத்த குழந்தைக்கு முயற்சி செய்வது நல்லது. பாதுகாப்பனதும்கூட.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker