சமையல் குறிப்புகள்புதியவை
குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் நேந்திரப்பழ ஆப்பிள் சாலட்
தேவையான பொருட்கள் :
நேந்திரம் பழம் – 1
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
பொடித்த நாட்டு சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி, பிஸ்தா, பாதாம் பொடித்தது – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
வட்டமாக நேந்திரப் பழத்தை அறியவும்.
ஆப்பிளை தோல் நீக்கி சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெட்டிய நேந்திரம் பழம், ஆப்பிள் துண்டுகளை போட்டு ஒன்றாக கலந்து அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து கலக்கவும்.
அடுத்து இந்த பழ சாலட்டில் பொடித்த நட்ஸ் தூவிக் கொள்ளவும்.
இறுதியாக, பொடித்த நாட்டுச் சர்க்கரை போட்டு லேசாகக் கிளறவும்.
20 நிமிடங்கள் அப்படியே ஊறவிட்டால் நாட்டுச் சர்க்கரை கரைந்திருக்கும். இப்போது, இதை எடுத்து சாப்பிடலாம்.