ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

முகத்துல மாதிரியே தலையிலயும் பரு வருதா?… என்ன காரணம்… எப்படி கை வைத்தியத்துல சரிசெய்யலாம்?

சருமம் மற்றும் மயிர்க்கால்களில் பாக்டீரியாக்களால் நிறைய பருக்கள் உண்டாகிறது. சரும துளைகள் அடைபடும் போது பாக்டீரியாக்கள் உருவாகி பருக்களை உருவாக்குகிறது. இப்படி பருக்கள் எதனால் ஏற்படுகிறது என அறிந்து கொள்வோம்.

பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய பிரச்சினைகளில் இந்த முகப்பரு பிரச்சினையும் ஒன்றாக உள்ளது. முகத்தில் தோன்றும் முகப்பருக்கள் அவ்வளவு சீக்கிரம் போவதில்லை. அப்படியே நாம் எதாவது க்ரீம்கள் மற்றும் சோப்புகளை பயன்படுத்தி போகச் செய்தால் கூட அப்படியே அதன் தழும்புகள் நம் முகத்தை கெடுத்து விடுகின்றன. அதேபோன்று தலையிலும் ஏற்படுகின்றன. அவற்றுக்கான காரணங்கள் என்ன, எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து இந்த பகுதியில் விளக்கமாகப் பார்க்கலாம்.

பருக்கள்

சருமத்தில் தோன்றும் பருக்களும் சரி தலையில் தோன்றும் பருக்களும் சரி மிகுந்த வேதனையை அளிப்பது உண்டு. அப்படியே சிவந்து போய் சீழ் வடிதல், மற்ற இடங்களுக்கு பரவுதல் போன்ற பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.

இந்த பருக்களை போக்குவதற்கு முன்பு முதலில் அது எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டறிய வேண்டும். பருக்கள் பொதுவாக பாக்டீரியாவால் உண்டாகிறது. மேலும் முகத்தில் இருக்கும் சரும துவாரங்கள் மூடும் போது பருக்கள் உண்டாகிறது. இதற்கு நம் முகத்தை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். முகத்தில் பருக்கள் தோன்ற இந்த மூன்று விஷயங்கள் தான் காரணமாம் வாங்க அதை பற்றி நாம் அறிந்து கொள்வோம்.

​பாக்டீரியாவால் ஏற்படும் முகப்பரு

பாக்டீரியாவால் ஏற்படும் முகப்பருவானது வெவ்வேறு அளவுகள், புடைப்புகள், முடிச்சுகள், நீர்க்கட்டிகள், பிளாக்ஹெட்ஸ் மற்றும் வைட்ஹெட்ஸ் ஆகியவற்றால் தோன்றுகிறது. அதிகப்படியாக சருமத்தில் உள்ள மயிர்க்கால்கள் அடைபடும் போது இது ஏற்படுகிறது. அப்படியே அங்கு பாக்டீரியாக்கள் வளருகின்றன. இதனால் அங்கு கரும்புள்ளிகள், வெண் புள்ளிகள் மற்றும் பருக்கள் வர ஆரம்பிக்கின்றன. இந்த முகப்பருவை போக்கி சிகிச்சை அளிக்க ரெட்டினோல், பென்சாயில் பெராக்சைடு மற்றும் சாலிசிலிக் அமிலம் போன்ற கெமிக்கல்களால் ஆன க்ரீம்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

​பூஞ்சை தொற்றால் ஏற்படும் முகப்பரு

தலையில் ஏற்படும் பூஞ்சை தொற்றால் தலையில் பருக்களானது உண்டாகிறது. இந்த சிறிய புடைப்புகள் மற்றும் ஒன்று அதற்கு மேற்பட்ட கொத்துக்களாக ஏற்படுகிறது. இந்த பருக்கள் தலையில் அரிப்பை ஏற்படுத்துகிறது. இந்த மாதிரியான பூஞ்சை முகப்பரு வகை நெற்றி, தோள்கள், முதுகு மற்றும் கழுத்தில் காணப்படுகிறது. இந்த பூஞ்சை பருக்களை பாடிவாஷ், தலையில் ஷாம்பு கொண்டு தேய்த்து குளிப்பதன் மூலம் போக்கலாம். நீங்கள் சரும நிபுணரை சந்தித்து சிகிச்சையை கூட மேற்கொள்ளலாம். வியர்வையான ஆடைகளை அணிவதை தவிருங்கள் , உடற்பயிற்சி செய்யும் போது ஜிம் உடைகளை மாற்றிக் கொள்ளுங்கள், உங்கள் முகத்தை நீர் கொண்டு கழுவவும், நீங்கள் வேலை செய்தவுடன் இரண்டு முறை குளிக்க மறக்காதீர்கள். இதன் மூலம் இந்த பூஞ்சை பருக்களை விரட்ட முடியும்.

​ஃபோலிகுலிடிஸ் (மயிர்க்கால்களில் வரும் பருக்கள்)

ஃபோலிகுலிடிஸ் என்பது அடிப்படையில் மயிர்க்கால்களில் ஏற்படும் அழற்சி ஆகும். நீங்கள் முடிகளை ஷேவிங் மற்றும் வாக்கிங் செய்யும் போது இந்த வகை பருக்கள் ஏற்படுகிறது. பழைய ரேஸரை பயன்படுத்தி முடியை எடுக்கும் போது இந்த வகை பருக்கள் உண்டாகிறது. முடி இருக்கும் உடலின் எந்தப் பகுதியிலும் மயிர்க்கால்களைச் சுற்றி ஒரு சீழ் கொதி உருவாகி ஃபோலிகுலிடிஸை உண்டாக்குகிறது. இந்த வகை பருக்கள் கைகள், முதுகு மற்றும் கால்களில் ஏற்படுகிறது. இந்த வகை பருக்களை போக்க ஆன்டி பாக்டீரியல் க்ரீம்களை சரும மருத்துவர் பரிந்துரைப்பார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker