ஆரோக்கியம்மருத்துவம்

சர்க்கரை நோயின் விழிப்புணர்வு

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை சர்க்கரை நோய் என்போம். இந்த சர்க்கரை எங்கிருந்து வருகிறதுயென்றால் நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து வருகிறது. இனிப்பை உட்கொள்ளுவதால் மட்டுமல்ல எந்த உணவை உண்டாலும் அது குளுக்கோஸாக மாற்றப்படுகிறது.

நாம் நடப்பதற்கு பேசுவதற்கு உடல் செயல்பாடுகளுக்கும் பயன்பாட்டின் பெரும் பங்காகிறது இந்த சர்க்கரை நாம் உடலுக்கு சென்று எப்படி சர்க்கரை நோயாக மாறுகிறது என்றால் நாம் உணவு உட்கொண்ட பிறகு உடலில் செரிக்கப்பட்டு அது குளுகோசாக மாறுகிறு உங்கள் குடலில்யிருந்து குளுகோஸ் ரத்தத்தில் உடல் அணுக்களுக்குள் செல்கிறது அதே நேரம் குளுகோஸ் உடலில் கணயத்திற்கு பின்புறம் உள்ள சுரப்பு பகுதிக்கு கட்டளையிட்டு இன்சுலின் என்கின்ற வேதிப் பொருளை சுரக்கவைக்கிறது.



குளுக்கோசைப்போலவே இன்சுலின் ரத்தத்தின் வழியாக உடல் அணுக்களை அடைகிறது. குளுக்கோசாக இன்சுலினும் உடல் அணுக்களில் சந்திக்கின்றன. ஆனால் அணுக்களில் உள்ள பூட்டு போன்ற இன்சுலின் ஒரு சாவி போல செயல்பட்டு அணுக்களை திறந்து குளுக்கோசை அணுக்களுக்குள் அனுப்புகிறது குளுக்கோஸ் அணுகளுக்குள் சென்றதும் அவைகள் சக்திதரும் பொருளாக மாறுகிறது.

உடலில் சக்கரை அளவு அதிகரிக்கும் போது உடலில் சோர்வு மற்றும் களைப்பு உண்டாகிறது. இது நீரழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாகும். இதுபோக மற்ற அறிகுறி என்னவென்றால் அதிகப்படியான பசி, அதிக சிறுநீர் கழித்தல், அதிகப்படியான தாகம், மீண்டும் மீண்டும் சர்மத்திலும் ஈர்கழிலும் ஆண் மற்றும் பெண் உறுப்பிலும் நோய் தொற்று மங்களான பார்வை பாதங்களில் உணர்வுகள் இழந்து உலர்ந்து அரிப்புகள் ஏற்படும்.

சர்க்கரை நோய் கண்டறிய வேண்டுமானால் ரத்தத்தில் குளுகோஸ் (சர்க்கரையின்) அளவை பரிசோதிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னாலும், சாப்பிட்ட இரண்டு மணிநேரத்திற்கு பின்பும் பரிசோதிக்க வேண்டும் 7BS-126 PPS- 200க்கு மேல் இருந்தால் நீரழிவு நோயின் காரணமாகும்.



ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை நாம் எவ்வாறு கட்டுப்படுத்துவதுயென்றால் வாழக்கைமுறையின் மாற்றங்களால் கட்டுப்படுத்தலாம் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதினாலோ, மாவு சத்து (Carbohydrate) உள்ள உணவை குறைவாகவும் நார்சத்து மற்றும் காய்கறிகளை அதிகளவு உண்ணவும் உடலின் எடையை கட்டுப்படுத்த உடல்பயிற்சியை வழக்கமாக்கி வருடத்தில் 1 முறையாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker