ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

உடலில் வரும் சூட்டு கொப்புளம் – தீர்வு தரும் கைவைத்தியம்

உடலில் வரும் சூட்டு கொப்புளம் - தீர்வு தரும் கைவைத்தியம்

நாட்பட்ட நோய் பாதிப்பு அல்லது சில குறிப்பிட்ட நோய் பாதிப்புகள் உடலில் ஏற்படும்போது, உடலின் பல்வேறு பகுதிகளில் கொப்பளங்கள் உண்டாகிறது. இவை மிகவும் வலி நிறைந்ததாக கருதப்படுகிறது. கொப்பளங்களைப் போக்க பல எளிய தீர்வுகள் இருந்தாலும், அவை உடலில் ஏற்படத் தொடங்கும்போதே அதற்கான சிகிச்சையை பின்பற்றி அவற்றைப் போக்குவது நல்லது.

சருமத்தில் உண்டாகும் சீழ் நிறைந்த தடிப்புகள் கொப்பளங்கள் ஆகும். பொதுவாக இவை சிவப்பு நிறத்தில் தோன்றும். பாதிக்கப்பட்ட பகுதி பொதுவாக வலி நிறைந்து காணப்படும். அவ்வப்போது சீழ் வடிதலும் இருக்கும். இவை தொற்று பாதிப்பால் உண்டாவதால் உடலின் மற்ற இடங்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது மற்றும் சிறிய அளவில் இருந்து பெரிய அளவாக வளரவும் வாய்ப்புகள் உள்ளது.

பொதுவாக உடலில் முடி அதிகம் இருக்கும் இடங்களில் கொப்பளங்கள் தோன்றலாம். கொப்பளங்கள் உருவாவது மற்றும் தொற்றுவதில் இருந்து எப்படி தடுப்பது கொப்பளங்கள் உருவாவதை கணிக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் சருமம் தடிக்கும் வரை கொப்பளம் உருவாவதை நாம் அறிந்து கொள்ள முடியாது. அப்படி தடிப்புகள் உண்டான இடங்களை கிள்ளவோ, சொரியவோ, கீறவோ கூடாது என்பது முக்கியமாக அறிவுறுத்தப்படுகிறது.

வலியுடன் கூடிய சரும தடிப்புகள் இருந்தால் நாளடைவில் அது கட்டியாக உருவாகலாம். ஆகவே அந்த இடத்தில் வெந்நீர் ஒத்தடம் தருவதால் வலி குறைந்து சீழ் கட்டாமல் இருக்கும் வாய்ப்புகள் உண்டு. வெதுவெதுப்பான துணியால் ஒத்தடம் தருவதால், சீழ் கட்டியாக மாறாமல், எளிதில் தடிப்பு கரைந்து விடலாம்.

கொப்பளங்கள் உள்ளவர்கள் பயன்படுத்தும் துண்டு அல்லது ஆடைகளை மற்றவர் பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். முன்கூட்டியே கட்டிகள் கண்டறியப்பட்டால், இறுக்கமாக ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். குறுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க கிருமி நாசினி சோப்பு பயன்படுத்தி அந்த இடத்தை சுத்தம் செய்யலாம். கொப்பளங்களுக்கு அதன் தீவிர தன்மையைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படலாம்.






வெந்நீர் ஒத்தடம் சிறிய அளவு வலியில்லாத கொப்பளங்கள் தானாக குணமாகிவிடும். அப்படி குணமாகவில்லை என்றால் வெந்நீர் ஒத்தடம் நல்ல தீர்வைத் தரும். பெரிதாக வளர்ந்த கொப்பளங்களைப் போக்க நோய் நுண்மங்கள் ஒழிக்கப்பட்ட ஒத்தடம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி சிகிச்சை நல்ல பலனத் தரும். சூடு ஒத்தடம் தருவதால் வெள்ளை இரத்த அணுக்களின் ஓட்டம் அதிகரித்து விரைந்து காயங்கள் குணமடைகிறது. சூடு ஒத்தடத்தை சரியான வழியில் பின்பற்றினால் ஆச்சர்யமான விளைவுகளைக் காண முடியும்.

டீ ட்ரி ஆயில் டீ ட்ரீ எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பயன்படுத்துவதால் அவற்றின் கிருமி எதிர்ப்பு தன்மை காரணமாக கொப்பளங்கள் எளிதில் குணமாக முடியும். மஞ்சள் மஞ்சளுக்கு அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமி எதிர்ப்பு தன்மைகள் இருப்பதால் கொப்பளங்களைப் போக்க சிறந்த தீர்வைத் தருகிறது. மஞ்சளை சருமத்தின் மேல்புறமாக தடவலாம் அல்லது மஞ்சள் கலந்த நீரை பருகலாம்.

வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றிற்கு கிருமி எதிர்ப்பு தன்மை உள்ளது. இவை கொப்பளங்களை எதிர்த்து போராடுகிறது. கிருமிநாசினி தன்மை உள்ள இந்த எண்ணெய்களை பயன்படுத்துவதால் கொப்பளங்கள் நீண்ட காலம் சருமத்தில் இருப்பதில்லை. கொப்பளங்கள் பெரிதாக, வலி அதிகமாக, சீழ் அதிகமாக இருந்தால் மருத்துவரிடம் சென்று கொப்பளத்தை வெட்டி எடுக்க வேண்டியது அவசியமாகும்.






கொப்பளத்தைக் குத்தி அதில் உள்ள சீழை வெளியேற்றி காயத்தை மருத்துவர்கள் அகற்றுவார்கள். இந்த சிகிச்சையுடன் நுண்ணுயிர் எதிர்ப்பி சிகிச்சையை சேர்த்து அளிப்பதால், வலி குறைந்து தொற்று பரவாமல் தடுக்கப்படுகிறது. கொப்பளத்தின் நிலையை அறிந்து தீவிரத்தை உணர்ந்து மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker