ஹேர் ஸ்பா வீட்டில் செய்யலாமா?
தற்போது, `ஸ்பா ட்ரீட்மென்ட்’ பல்வேறு பார்லர்களில் பரவலாகச் செய்யப்படுகிறது. இந்த ஸ்பாவில், இரண்டு வகை இருக்கிறது.
1. பாடி ஸ்பா
2. ஹேர் ஸ்பா
பாடி ஸ்பாவைவிட, ஹேர் ஸ்பாவையே பலரும் விரும்புகிறார்கள். ஹேர் ஸ்பா என்பது, அவரவரின் ஸ்கால்ப் அல்லது முடிக்கு ஏற்ப செய்யப்படுவது. முதலில் எந்த இடத்தில் பிரச்சனை உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பின்னரே, ஸ்பா ட்ரீட்மென்டை ஆரம்பிக்க வேண்டும்.
முடி வளரவே இல்லை எனச் சிலர் சொல்வார்கள். எதனால் முடி வளரவில்லை என்பதைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஒருவேளை, பொடுகினால் பிரச்னை ஏற்படலாம். அல்லது ஸ்கால்பில் வேறு ஏதாவது பிரச்னைகள் இருக்கலாம். இன்னும் சிலருக்கு, முடி டிரையாக இருக்கும். ஷைனிங் இல்லாமல் இருக்கலாம். அல்லது முடி பிளவு இருக்கலாம். பிரச்னையைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப செய்ய வேண்டும்.
ஹேர் வாஷ் செய்ய, அவரவர் முடியின் தன்மைக்கு ஏற்ற ஷாம்பு வகைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
1. பியூரிஃபையிங் ஷாம்பு (Purifying Shampoo)
2. டீடாக்ஸ் ஷாம்பு (detox shampoo)
பியூரிஃபையிங் ஷாம்பு என்பது, அதிகம் பொடுகு இருப்பவர்களுக்குப் பயன்படுத்துவது. டீடாக்ஸ் ஷாம்பு என்பது, மற்ற அனைத்து முடிப் பிரச்சனைக்குமானது.
நரேஷிங் கிரீம் பாத் (nourishing cream bath), ஹைடிரேட்டிங் கிரீம் பாத் hydrating cream bath) போன்ற பல கிரீம் பாத்கள் இருக்கின்றன. அவரவர் முடியின் தன்மைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்க வேண்டும்.
முடி கடினமா இருக்கிறதா, அதிகமாகச் சிதைவடைந்து இருக்கிறதா, அல்லது ஹேர் டிரையாக இருக்கிறதா, இதையெல்லாம் கவனித்து, கிரீமைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் ஸ்கெல்ப்பில், பொடுகு இருக்கிறதா, ஸ்கெல்ப் காய்ந்து அரிப்பு ஏற்படுதா, அல்லது நீர்ச்சத்து குறைவாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
ஸ்கேனரைப் பயன்படுத்தியோ அல்லது மேக்னிஃபையிங் மிரர் ( magnifying mirror) பயன்படுத்தியோ ஸ்கால்ப் பிரச்சனைகளைத் தெரிந்துகொள்ளலாம். இவை அனைத்தையும் பரிசோதித்துவிட்டு, பிரச்னைகளுக்கு ஏற்ப ட்ரீட்மென்ட் செய்ய வேண்டும். இது புரொபஷனல் ட்ரீட்மென்ட். இதை வீட்டில் செய்யவே கூடாது. பார்லரில் மட்டுமே செய்துகொள்ள வேண்டும்.
கடைகளில் ஸ்பா ஷாம்பு, கண்டிஷனர் கிடைக்கும். அவற்றை வீட்டில் பயன்படுத்தலாம். ஆனால், புரொபஷனல் ட்ரீட்மென்ட் செய்தால் தீர்வு கிடைக்கும் எனில், நிச்சயம் புரொபஷனலையே அணுக வேண்டும்.
ஹேர் ஸ்பா எடுத்த பின்னர், அவர்கள் பரிந்துரைக்கும் ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களைப் பயன்படுத்தினால், தொடர்ந்து பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். அவரவர் பிரச்னைக்கு ஏற்ப, இரண்டு வாரத்துக்கு ஒருமுறையோ, நான்கு வாரத்துக்கு ஒருமுறையோ, ஸ்பா ட்ரீட்மென்ட் செய்துகொள்ள வேண்டும். அன்றாட பராமரிப்புக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை ஸ்பா ட்ரீட்மென்ட் மேற்கொள்ளலாம்.