ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

இருதயத்தை பாதிக்கும் தொண்டை நோய் தொற்று

இருதயத்தை பாதிக்கும் தொண்டை நோய் தொற்று

நான் பாடினா நல்லாத்தான் இருக்கும். என் குரல் அப்படி. ஆனால், ஒரு நாள் தொண்டையில் திடீர் கரகரப்பு. அப்போதே பதறிப் போய்ச் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்த கஷாயம் போட்டுப் பாடகர் ரேஞ்சுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எல்லாம் எடுத்துக்கொண்டேன் என்றார் நண்பர் ஒருவர். இவர் பெரிதாக பயப்படாவிட்டாலும், தொண்டையில் நோய்த்தொற்று ஏற்பட்டால், கொஞ்சம் கவலைப்படுவது நல்லது. ஏன் என்றால் தொண்டை நோய்த்தொற்றுக்கும், இருதயத்துக்கும் தொடர்பு இருக்கிறதே.






தொண்டையில் தொற்று ஏற்பட்டவுடன் தண்ணீரில் உப்பைக் கலந்து வாய் கொப்பளித்தல், குளிர்பானங்களைத் தவிர்த்தல் போதும் என்றெல்லாம் இருப்பது வழக்கம். தொண்டை கரகரப்பு, காய்ச்சல் தானே ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்ற அலட்சியப் போக்கு இயல்பாகவே நம் அனைவரிடமும் உண்டு. ஆனால் தொண்டை நோய்த்தொற்று இருதயச் செயல்பாட்டைப் பாதிக்கும் என்ற அதிர்ச்சிகரமான செய்தி, பலருக்கும் தெரியாது.






இருதய பாதிப்பினால் ரத்த ஓட்டம் சீர்குலைந்து மூளைக்கு ரத்தம் சரியாகச் செல்லாததாலேயே மயக்கம் ஏற்படுகிறது. இருதய வால்வில் ஒரே வழியாகச் சென்று வர வேண்டிய ரத்தமானது, இரு வழியாகச் சென்று வரத் தொடங்கும். மேலும் உள்ளே சென்ற ரத்தமானது முழுமையாக வெளியேறாமல், பாதி மட்டுமே வெளியேற, மீதி ரத்தம் ஒவ்வொரு முறையும் இருதயத்திலேயே தங்கிவிடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த அதிகப்படியான ரத்தத்தைத் தாங்குவதற்காக இருதயம் விரிவடைய தொடங்குகிறது. ஒரு தொண்டை நோய்த்தொற்று இருதயத்தை இப்படியும் பாதிக்குமா? ஆம், 15 நாட்களுக்கு மேல் தொண்டை நோய்த்தொற்றும், தொடர்ந்து காய்ச்சலும் இருந்தால் அலட்சியம் செய்துவிடாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ- மாணவிகளிடம் இந்நோய்த்தொற்று விரைவாகப் பரவும். இந்நோய் ராணுவ வீரர்களையும் தாக்கியுள்ளது. எந்த வயதிலும் இந்த நோய்த்தொற்று ஏற்படலாம். உடனடியாக மருத்துவரை அணுகுவதே சாலச் சிறந்தது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker