உடல் முழுவதும் பெர்ப்யூம் அடித்துக் கொண்டால் மட்டும் உடலில் துர்நாற்றம் வீசாமல் இருக்காது. அளவுக்கு அதிகமான பெர்ப்யூம் அருகில் வருவோருக்கு மிகுந்த தலைவலியை ஏற்படுத்தும். ஆகவே குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நீங்கள் பெர்ப்யூம் அடித்தால் போதும். அதிலும் காதுகளுக்கு பின், மணிக்கட்டு மற்றும் கழுத்து போன்ற இடங்களில் மட்டும் ஆண்கள் பெர்ப்யூம் அடித்துக் கொண்டால் மட்டும் போதும். அதுவே அவர்கள் மீது அளவாக நல்ல நறுமணத்தை வீசும்.
ஆண்களின் உதடுகளைப் பார்த்தால் முத்தம் கொடுக்க தோன்ற வேண்டும். அதைவிட்டு உலர்ந்து காணப்பட்டால், யாருக்கு தான் பிடிக்கும். ஆகவே உதடுகளை எப்போதும் வறட்சியின்றி நீர்ப்பசையுடன் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு வேஸ்லினை உதடுகளுக்கு தடவி வாருங்கள்.
பற்கள் காலையில் காபி குடிப்பதில் இருந்து சிகரெட் மற்றும் இதர குளிர் பானங்களைக் குடிப்பதால், முத்துப் போன்ற பற்கள் மஞ்சள் நிறத்தில் அழுகிப் போன பற்கள் போன்றாகிவிட்டன. மஞ்சள் நிறத்தில் பற்கள் இருந்தால், எந்த ஒரு பெண்ணும் அருகில் கூட ஏன் பேச கூடமாட்டாள். ஆகவே தினமும் பற்களை துலக்கும் போது பேஸ்ட்டில் சிறிது உப்பு தூவி துலக்குங்கள். அல்லது வேறு ஏதேனும் இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றி பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்குங்கள்.
வயதாக ஆக உடலின் பல பகுதிகளில் தேவையற்ற முடிகள் அதிகம் வளர ஆரம்பிக்கும். ஆனால், சில ஆண்களுக்கு இளமையிலேயே மூக்குகளில் வளரும் முடியானது வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும். அப்படி மூக்குகளில் முடி நீட்டிக் கொண்டிருந்தால், அது மோசமான தோற்றத்தை வெளிக்காட்டும். ஆகவே அவ்வப்போது மூக்கில் வளரும் முடியை வெட்டிவிடுங்கள்.