மீன் முட்டை பொரியல்
தேவையான பொருட்கள்
மீன் முட்டை – 250 கிராம்
சின்ன வெங்காயம் – 200 கிராம்
பூண்டு – 10 பற்கள்
மஞ்சள்தூள் – சிறிதளவு
பச்சைமிளகாய் – 4
இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
சின்ன வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீன் முட்டையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவேண்டும்.
அடுத்து இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுது நன்றாக வதங்கியதும சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவேண்டும்.
பின் மீன் முட்டையை போட்டு கைவிடாமல் அடிபிடிக்காமல் கிளறவேண்டும். மீன் முட்டை நன்கு வெந்து உதிரி உதிரியாக ஆகும் வரை கிளறவேண்டும்.
கடைசியாக தேங்காய் துருவல், கொத்தமல்லி தூவி ஒரு கிளறு கிளறிவிட்டு இறக்கி பரிமாறவும்.
சூப்பரான மீன் முட்டை பொரியல் ரெடி.