ஆரோக்கியம்புதியவை

நடுத்தர வயதினருக்கு நல்ல செய்தி

நடுத்தர வயதினருக்கு நல்ல செய்தி

நடுத்தர வயதுக்காரர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அமெரிக்க ஆய்வாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.

பல்லாண்டு காலம் உடற்பயிற்சிகள் இன்றி சோம்பேறியாக நாட்களைக் கழித்த நடுத்தர வயதினரும், தமது வாழ்க்கையில் ஏற்பட்ட உடல் நலப் பாதிப்புக்களை இல்லாமல் போக்கமுடியும் என அந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.






அதற்காக நடுத்தர வயதினர் முறையான உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த முறையான உடற்பயிற்சிகளின் மூலம், முந்தைய பாதிப்புக்களை நீக்கி புதுப்பொலிவைப் பெறலாம் என அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க இதய சங்கத்தின் உடற்பயிற்சி வழிகாட்டல்கள் அடிப்படையில் ஓர் இரண்டாண்டு காலத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்ட நடுத்தர வயதினரின் இதயங்கள் சிறப்பாக வேலை செய்ததாகவும், மாரடைப்பு அபாயம் குறைந்ததாகவும் டெக்சாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் பெஞ்சமின் லெவின் தெரிவித்தார்.

‘இப்பகூட ஒண்ணும் கெட்டுப் போகல’ என்பார்களே, அதுபோல ஒரு மகிழ்ச்சியான முடிவை இந்த ஆய்வு வெளிப்படுத்தியிருக்கிறது.

நடுத்தர வயதினரிடம் பொதுவாக ஒரு மூடநம்பிக்கை இருக்கிறது, அதாவது உடற்பயிற்சிகள் இல்லாமல் தொப்பையும் பருத்த உடலும் கொண்டவர்கள் இனிமேல் தம்மால் பழைய உடலமைப்பைப் பெறமுடியாது என நினைக்கின்றனர்.






உண்மையில் இது தவறான கணிப்பாகும். எந்த வயதினருக்கும் உடற்பயிற்சி இளமையான தோற்றத்தை மீட்டுத் தந்துவிடும் என அறிவியல் சொல்கிறது.

தமது உடலமைப்பு குறித்து நடுத்தர வயதினர் மத்தியில் நிலவும் மேற்படி மூடநம்பிக்கைதான் அவர்களை வேகமாக மரணமடைய வைக்கிறது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உழைப்பும் உடற்பயிற்சியும் எந்தக் காலத்திலும் பயன் தரும்!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker