தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை
குழந்தைக்கு எத்தனை முறை தாய்ப்பால் தர வேண்டும்?
ஒரு குழந்தையின் உடலை பாதுகாப்பதில் தாய்ப்பாலுக்கு நிகர் எதுவுமே இல்லை. தாய்ப்பால் போதிய அளவு அளிப்பதால் குழந்தையை தொற்று நோய்க்கிருமிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். சர்க்கரை நோய் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கலாம். அதிக எடை அடையாமலும் தடுக்க முடியும் என்கிறது மருத்துவ ஆய்வுகள்.
குழந்தைக்கு ஒரு நாளில் சிறிது, சிறிதாக 8 முறை தாய்ப்பால் ஊட்டலாம். சில நேரங்களில் 12 முறை வரை கூட சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டியது இருக்கும். இது இயற்கையானது தான். பொதுவாக, குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு பால் ஊட்ட வேண்டும் என்ற திட்டம் எல்லாம் இருக்கக் கூடாது. குழந்தைக்கு பசி இருப்பது தெரியவந்தால் பால் ஊட்ட வேண்டும். சில குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை பால் குடிப்பதே போதுமானதாக இருக்கும். சில குழந்தைகளுக்கு பல முறை உணவு தேவைப்படும். எனவே, பால் கொடுப்பதில் வரைமுறை எதுவும் இல்லை. சில குழந்தைகள் சில நேரங்களில் பாலை அடிக்கடி துப்பி விடும். இதுவும் இயற்கையானது தான். கவலைப்படத் தேவை இல்லை.

பொதுவாக, பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் தாய்ப்பாலைத் தவிர வேறு உணவுகள் எதையும் தரக்கூடாது. 6 மாதத்திற்கு மேல் மருத்துவரின் ஆலோசனைப்படி சில உணவுகளைக் கொடுக்கலாம்.
குழந்தை கருப்பாக மலம் கழித்தாலும், குழந்தை சரியான அளவில் சிறுநீர் கழிக்கவில்லை என்றாலும் மருத்துவரிடம் பரிசோதனை செய்து விட்டு பிறகு தாய்ப்பாலைத் தொடரவும்.