புதியவைவீடு-தோட்டம்

9 வீட்டுடைமை நெருக்கடிகளை உப்பை கொண்டு சமாளிக்கலாம்

முட்டை ஓட்டில் விரிசல் ஏற்பட்டு வெளியே கசிவது போன்ற எண்ணிலடங்கா வீட்டுடைமை நெருக்கடிகளை சமாளிக்க சிறிதளவு உப்பு இருந்தால் போதுமானது. இதனை சமாளிப்பது மட்டும் சுலபம் அல்ல; பிற விலை உயர்ந்த சுத்தப்படுத்தும் பொருட்களையும் காட்டிலும் மலிவு விலையில் கிடைக்கக்கூடியவை ஆகும். உப்பு நமக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை தெரிந்து கொள்வோமா? தொடர்ந்து படியுங்கள்!!!

1. அயர்ன் பாக்ஸ் மீது அசிங்கமாக ஒட்டிக்கொண்டிருக்கும் அழுக்கை போக்க:

அயர்ன் பாக்ஸை ஆன் செய்து விடுங்கள். பின் ஒரு மெழுகு தாளில் உப்பை நிறைய தூவி விடுங்கள். சூடாக இருக்கும் அயர்ன் பாக்ஸை அந்த தாளின் மீது தேய்க்கவும். அயர்ன் பாக்ஸ் மீது அசிங்கமாக ஒட்டிக்கொண்டிருக்கும் அழுக்கை இது போக்கி விடும்.






2. பூஞ்சை காளானை போக்க:

துணிகள் மற்றும் துண்டுகளில் காணப்படும் பூஞ்சை காளான் கரைகள் மற்றும் வாசனையை போக்க உப்பு மற்றும் எலுமிச்சை ஜூஸை கொண்டு பேஸ்ட் ஒன்றை தயார் செய்யவும். கரை மீது இந்த பேஸ்ட்டை தடவி, சற்று நேரம் காய (சூரிய ஒளியில்) விடுங்கள். பின் அந்த ஆடைகளை உங்கள் வாஷிங் மெஷினில் போட்டு துவைத்திடவும்.

3. நீங்களே பாத்திரம் கழுவும் டிட்டர்ஜென்ட்டை தயார் செய்யலாம்:

உப்பு, பேக்கிங் சோடா மற்றும் பாத்திரம் கழுவும் சோப்பை கொண்டு நீங்களே பாத்திரம் கழுவும் டிட்டர்ஜென்ட்டை தயாரிக்கலாம். அது கண்டிப்பாக மாயங்களை நிகழ்த்தும்!

4. கறை படிந்த ஸ்பாஞ்சை கழுவ:

ஒரு பாட்டிலில் 2 கப் தண்ணீர் மற்றும் கால் கப் உப்பை போடவும். கிரீஸ் படிந்து, கறையாகி உள்ள உங்கள் ஸ்பாஞ்சை முந்தைய நாள் இரவே அதில் ஊற வைத்து விடுங்கள். காலையில் பார்த்தால் இந்த கறைகள் பறந்தோடியிருக்கும்.






5. சட்டியில் உள்ள கிரீஸ் கறையை போக்க:

கிரீஸ் படிந்த இடத்தை உப்பை கொண்டு நன்றாக மூடவும். அதன் பின் அதன் மீது தண்ணீர் ஊற்றி, 10 நிமிடங்கள் வரை காத்திருக்கவும். இந்த சொல்யூஷன் கிரீஸை கரையச் செய்யும். இதனால் அழுக்கை துடைத்து எடுப்பது சுலபமாகி விடும்.

6. காய்கறி வெட்ட பயன்படுத்தப்படும்

அழுக்கு படிந்த மர அட்டையை கழுவ: காய்கறி வெட்ட பயன்படுத்தப்படும் மர அட்டையை டிஷ் வாஷரில் போடக்கூடாது. ஆனால் அவற்றின் மீது உப்பு, எலுமிச்சை ஜூஸ் மற்றும் வெந்நீரை ஊற்றி கழுவலாம்.

7. விரிசல் விழுந்த முட்டையை துடைக்க:

விரிசல் விழுந்த முட்டையை துடைக்க இனி காகித துண்டுகளை சாரை சாரையாக பயன்படுத்த தேவையில்லை. விரிசல் விழுந்து பாழாகியுள்ள முட்டையின் மீது உப்பை தடவி, 10-15 நிமிடங்கள் வரை காத்திருக்கவும். பிசுபிசுவென இருக்கும் பகுதிகள் மணல் தூசுகளாக மாறி விடும். இனி அவைகளை சுலபமாக துடைத்து எடுத்து விடலாம்.






8. சிகப்பு வைன் கறையை துடைக்க:

கறை ஏற்பட்ட உடனேயே அவற்றின் மீது உப்பை தூவி விட்டு, 5 நிமிடங்கள் வரை காத்திருக்கவும். பின் அதன் மீது குளிர்ந்த நீரை தெளித்து, கறை நீங்கும் வரை நன்றாக துடைக்கவும்.

9. வடிகாலில் முடி தேங்குவதை நீக்க:

1/4 கப் பேக்கிங் சோடாவுடன் 1/4 கப் உப்பை கலந்து அதனை இயற்கையான வடிகால் துடைக்கும் கலவையாக பயன்படுத்தலாம். வடிகாலில் தேங்கும் முடிகளை நீங்கள் கையில் எடுத்து கொத்தாக நீக்கி விடுங்கள். அதன் பின் இந்த கலவையை வடிகாலில் ஊற்றுங்கள். பின் 1/2 கப் வெள்ளை வினீகரை அதில் ஊற்றவும். பின் 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பின் சுடு நீரை ஊற்றி அனைத்தையும் கழுவி விடுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker