பெண்களே செலவைக் குறைக்க சில டிப்ஸ்
‘எவ்வளவு வருமானம் வந்தாலும் பத்தல…’ என்பதே பெண்கள் பலரின் புலம்பலாக உள்ளது. அவர்கள் பெரும்பாலும் வீண் செலவு வழிகளை அடைக்காமல் இருப்பார்கள். சரி, செலவை எப்படிக் குறைக்கலாம் என்று கூறுங்களேன் என்கிறீர்களா? இதோ, சில ‘டிப்ஸ்’…
போக்குவரத்துச் செலவை கூடியமட்டும் குறைக்க முயலுங்கள். ஒரே பகுதியில் இருந்து மற்றொரு குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லும் நண்பர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள், வாகனத்தைப் பகிர்ந்துகொள்ளலாம். இது சுற்றுச்சூழலுக்கும் நன்மை சேர்க்கும் விஷயம்.
தேவையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஏ.சி., மின்விசிறி போன்றவற்றை அணைப்பதுடன், குழந்தைகளுக்கும் அப்பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
சில பெரும் நிறுவனங்கள், கடைகள், குறிப்பிட்ட காலத்தில் தள்ளுபடி வழங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அதைக் கவனித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
வெளியிடங்களில் சாப்பிடு வதைக் குறைத்துக்கொள்வது, பர்சுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்துக்கும் நல்லது.
திரையரங்கில் படம் பார்ப்பது செலவு பிடிக்கும் விஷயமாகிவரு கிறது. சிறிது காலம் பொறுத்திருந்தால், முறைப்படி இணையத்திலேயே பணம் செலுத்திப் பார்க்க முடியும்.
‘ஜிம்’முக்கு பணம் கட்டிவிட்டு, போகாமல் இருப்பதைவிட, வீட்டி லேயே உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.
பழையதாகிவிட்டது என்பதாலேயே ஒரு பொருளை தூக்கிப் போட்டுவிடாமல், அதிகபட்சம் எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.
வீட்டில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் தனித்தனி செல்போன், அவற்றுக்கான செலவு தேவையா என யோசியுங்கள்.
பணமாக எடுத்துக் கொடுப்பதைவிட, கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது நாம் அதிகம் செலவழித்துவிடுகிறோம். எனவே கிரெடிட் கார்டை பர்சை விட்டு வெளியே எடுப்பதை கூடியவரை தவிருங்கள்.