சமையல் குறிப்புகள்புதியவை
சிக்கன் மிளகு கறி
சமைக்க தேவையானவை
செய்முறை
முதலில் பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு, இஞ்சியை விழுதாய் அரைத்துக் கொள்ளவும்.
பின்பு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு பட்டை, கிராம்பு தாளித்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்.
வதங்கியபின் இஞ்சி, பூண்டு விழுதினைப் போட்டு வதக்கி, பிறகு தக்காளியைப் போட்டு வதக்கி கழுவிய சிக்கனைப் போட்டு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். சிறிது கறிவேப்பிலையையும் உடன் சேர்த்துக் கொள்ளவும்.
கறி நன்கு வதங்கியபின் 1 டம்ளர் தண்ணீர் விட்டு மூடிவிடவும். கொதித்து குழம்பான பிறகு,பின்பு பரிமாறவும்.