குழந்தைகளுக்கு விருப்பமான தேங்காய் மிட்டாய்
தேவையான பொருள்கள் :
துருவிய தேங்காய் – 1 கப்
சர்க்கரை – 1 கப்
பால் – தேவையான அளவு
ஏலக்காய் தூள் – 1 சிறிதளவு
செய்முறை :
தேங்காயை நன்றாக துருவி கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் துருவிய தேங்காயை கொட்டி அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.
ஒரு 5 நிமிடங்கள் கழித்து சர்க்கரை நன்றாக இளக தொடங்கும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
5 நிமிடங்கள் கழித்து சிறிது (25 ml ) பால் சேர்த்து நன்றாக கிளறவும். பால் சேர்ப்பது தேங்காயை நன்றாக இலகுவாக்கும்.
தேங்காய் சர்க்கரை கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.
கடைசியாக ஏலக்காய் தூள் தூவி கிளறி விடவும்.
ஒரு தட்டில் நெய் தடவி கிளறிய சூட்டுடனே எடுத்து அதை தட்டில் பரப்பி விடவும்.
நன்றாக பரப்பி சமப்படுத்தி விரும்பிய வடிவத்தில் வெட்டி அதை நன்றாக ஆற விடவும்.
ஆறியதும் அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கலாம்.
தேங்காய் மிட்டாய்களை ஒரு வாரம் வரை வைத்து உண்ணலாம்.