எவ்வளவு காஸ்ட்லியா டிரஸ் வாங்கினாலும் ரொம்ப சீக்கிரம் வெளுத்துப்போகுதா? அப்போ இப்படி துவைங்க…
நாம் நிறைய பணம் கொடுத்து, மனதுக்குப் பிடித்தது போல் வாங்கி ஆசை ஆசையாய் சில நாட்கள் அணிந்திருப்போம். அப்படி மனதுக்குப் பிடித்த சில ஆடைகள் ஓரிரு முறை துவைத்த உடனேயே நிறம் மங்கி, வெளுக்க ஆரம்பித்து விடும். அப்படி உங்களுக்கு பிடித்த நல்ல ஆடை நிறம் மங்காமல் இருக்க வேண்டுமானால் என்ன செய்யலாம்?…
துவைத்தல்
தேடித்தேடி துணிகளில் சாயம் வெளுக்கிறதா? இயற்கையான முறையில் நாமே தடுக்கலாம். துணிகள் நாம் அணியும்போது கிழிவதை விட சலவை செய்யும்போது கிழிந்து போக வாய்ப்புகள் அதிகம். பரப்புகளில் மோதல்கள் ஏற்படுவதால் மேற்பரப்பு இழைகள் (பைபர்) கிழிந்து பரப்பு மங்கியது போல் தோற்றமளிக்கிறது. காலம் செல்ல செல்ல அதுவும் சாயமிழந்து வெளுக்கிறது.
உட்புறமாக திருப்பி துவைக்கவும்
கருப்பு அல்லது அடர்ந்த நிறமுள்ள துணிகளை துவைக்கும்போது, அவற்றை உட்புறமாக திருப்பி துவைப்பது முக்கியம். தூசு படிந்து அழுக்கு வருவதை நினைத்து கவலை பட வேண்டாம். அது தானாக சுத்தமாகி விடும். துணிகள் வெளுத்துப்போகாமல் தடுப்பதில் இது தான் முதல் படி.
உப்பு
துவைக்கும்போது ஒரு தேக்கரண்டி உப்பு சேர்ப்பதால் துணி உலர்ந்து டிரையரில் இருந்து வரும்போது வண்ணமயமாக வரும். உப்பில் உள்ள குளோரைடு துணியில் நிறம் அப்பிக்கொள்ள உதவும். உங்கள் துணிகளில் இதை முயற்சி செய்து பார்க்கவும்.
கரு மிளகு
சலவையில் உள்ள உங்கள் துணிகளுக்கு கொஞ்சம் கருமிளகு சேர்த்து வண்ணங்களை தக்க வைக்கலாம். மிளகின் துகள்கள் துணிகளில் ஒட்டிக்கொள்வதை பற்றி கவலை பட வேண்டாம். அலசும்போது அவை போய்விடும்.
சமையல் சோடா
இந்த எளிமையான சிறந்த பொருள், துணிகளின் நிறங்களை பிரகாசிக்க வைக்கிறது. அரை கப் சமையல் சோடா சேர்த்து துணிகளை துவையுங்கள்.. பிறகு பிரகாசத்தை கண்டு மகிழுங்கள்.
வினிகர்
ஒயிட் வினிகர் துணிகள் வெளுத்துப்போவதை தடுக்கிறது. அரை கப் வினிகரை சேர்க்கும்போது, அது உங்கள் துணிகளை பிரெஷ் செய்து, நிறங்களின் தன்மையை காக்கிறது. முதல் சலவைக்கு முன்பு கருமையான மற்றும் அடர்ந்த நிறமுடைய துணிகளை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பிறகு 1/2 கப் வினிகர் மற்றும் 2 தேக்கரண்டி உப்பு சேர்த்தால் துணிகளில் சாயம் அப்படியே இருக்கும்.