அழகு..அழகு..புதியவை
தேமல், கரும்புள்ளி குறைய
-
- கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை ஆகியவற்றை பாலில் அரைத்து, முகத்தில் தேமல், கரும்புள்ளி உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல், கரும்புள்ளி ஆகியவைகள் குறையும்.
- கமலா ஆரஞ்சு தோலை பொடி செய்து தினமும் தேயத்து குளித்து வந்தால் தேமல் குறையும்.
- மலைவேம்பு இலைகளை நன்கு அரைத்து அதன் சாறை தேமல் மீது பூசி வந்தால் தேமல் மற்றும் அரிப்பு குறையும்.
- கீழாநெல்லி இலை, கொத்தமல்லி இலை இவற்றை பாலில் அரைத்து தேமல் உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல் குறையும்.
- வெள்ளைப் பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்துத் தினமும் தோலில் தேய்த்துக் குளித்துவர தேமல் குறையும்.
- கருஞ்சீரகத்தை வறுத்து பொடி செய்து நல்லெண்ணெயில் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வர தேமல் குறையும்.
-
- முள்ளங்கிச் சாறு, எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு மூன்றையும் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வர தேமல் குறையும்.
- வெள்ளைபூண்டு,வெற்றிலை அரைத்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி குளித்து வர தேமல் குறையும்.
- சந்தனத்தை எலுமிச்சைச் சாற்றில் கலந்து தேமல் உள்ள இடத்தில் தடவி வர தேமல் குறையும்.
- நாயுருவி இலை சாறை தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி வர தேமல் குறையும்.
- ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் தேய்த்து குளித்து வர தேமல் குறையும்.