சமையல் குறிப்புகள்புதியவை
சத்து நிறைந்த ஓட்ஸ் – முட்டை சூப்
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் – 100 கிராம்
மக்காச்சோளம் – கால் கிலோ
மிளகு தூள் – சிறிதளவு
சோயா சாஸ் – சிறிதளவு
வெங்காயம் – 1
முட்டை வெள்ளைக்கரு – 1
பால் – அரை கப்
இஞ்சி – பூண்டு விழுது – சிறிதளவு
உப்பு – தேவைக்கு
செய்முறை :
ஓட்ஸ்சுடன் பால், தண்ணீர் சேர்த்து காய்ச்சி கொள்ள வேண்டும்.
மக்காசோளத்தை வேக வைத்து கொள்ளவும்.
முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் ஓட்ஸ் கலவையும், முட்டையின் வெள்ளைக்கருவையும் நுரை பொங்க அடித்து சேர்த்து கிளறிவிட வேண்டும்.
இறுதியில் மிளகுத்தூள் சேர்த்து ருசிக்கலாம்.
ஓட்ஸ் – முட்டை சூப் ரெடி.