நிச்சயதார்த்தம் என்ற இந்த சடங்கு நாம் இருவரும் (ஆண்- பெண்) திருமணம் செய்துகொள்வதற்கு நிச்சயிக்கப்பட்டு விட்டோம் என்பதை உணர்த்துகிறது.
“நிச்சயதார்த்தம் டூ திருமணம்” இந்த இடைப்பட்ட காலம் நிச்சயிக்கப்பட்ட இருவரும், ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வெற்றிகரமாக திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்க அச்சாரமிடுகிறது.ஆனால், இந்த நேரத்தில் வரம்புமீறும் பட்சத்தில் உறவுகள் சீர்குலையவும் வாய்ப்பிருக்கிறது. உதாரணத்திற்கு அளவுக்கதிமாக மொபைல்களில் உரையாடுவது, டேட்டிங் செல்வது, அளவுக்கதிமான அன்பளிப்புகளை பரிமாறிக்கொள்வது.
அளவுக்கதிகமாக மொபைல்களில் உரையாடுவதன் மூலம், இக்காலத்து பெண்கள் மற்றும் ஆண்களின் மனது உடலுறவில் ஈடுபடுவதற்கு துடிக்கிறது.
திருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக்கூடும், இதில் ஆண்கள் வரம்பு மீறினாலும், பெண்கள் தான் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும்.
ஏனெனில் இருபாலரும் தவறு செய்யும் பட்சத்தில், இதில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள்தான். நிச்சயதார்த்தத்துக்குப் பின், திருமணத்துக்கு முன் என்ற இடைவெளியில் அதிகம் நெருக்கமும் தவிர்க்கப்பட வேண்டியது. பேசுவது, சந்திப்பது என்றபோதிலும், அதை ஆவணமாக மாற்றும் சாத்தியங்களை தவிர்ப்பதும் புத்திசாலி பெண்ணுக்கு அழகு.
குறிப்பாக, சேர்ந்த மாதிரி புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம். தனித்த படங்களை பகிர்ந்து கொள்வதிலும்கூட ஆபத்து இருக்கிறது. பேச்சு, நெருக்கம், பகிர்வு ஆவணம் அனைத்திலும் எச்சரிக்கையும் முன் யோசனையும் அவசியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.