தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

பிரசவத்திற்கு பின் பெண்கள் மிஸ் பண்ணும் கர்ப்பகால சலுகைகள்

தாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கும் வரமாகும். முதல் மூன்று மாதம் வாந்தி, மயக்கம், அடுத்த மூன்று மாதம் அதீத களைப்பு கால்களில் வீக்கம், பிரசவ நேரத்தில் எலும்புகள் உடையும் அளவு வலி என பல கஷ்டங்கள் இருந்தாலும் பிரசவம் முடிந்து தன் குழந்தையை கைகளில் ஏந்தும்போது அந்த நொடியில் இத்தனை மாதம் அடைந்த இன்னல்கள் அனைத்தும் நொடியில் மறைந்துவிடும். அதுதான் தாய்மையின் சிறப்பு.

Pregnancy

கர்ப்பகாலம் பெண்களுக்கு உடலளவில் கஷ்டமாக இருந்தாலும் மனதளவில் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். ஏனெனில் கர்ப்பகாலத்தில் அவர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், கவனிப்பு, அன்பு என அவர்கள் ஒரு மகாராணி போல் உணருவார்கள். உண்மையில் சொல்லப்போனால் பிரசவத்திற்கு பிறகு பெண்கள் கர்ப்பகாலத்தை மிகவும் ‘மிஸ்’ பண்ணுவார்கள். பிரசவத்திற்கு பின் பெண்கள் ‘மிஸ்’ செய்யும் கர்ப்பகால மகிழ்ச்சிகள் எவை என்பதை இங்கு பார்க்கலாம்.

உணவு

உணவு

கர்ப்பகாலத்தில் உங்களுக்கு பிடித்திருக்கிறதோ, பிடிக்கவில்லையோ இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பீர்கள். மேலும் உங்களுக்கு பிடித்த உணவுகள் அனைத்தும் வேண்டுமளவிற்கு இருக்கும் இடத்திற்கே தேடிவரும். அன்பான கணவராய் இருந்தால் சாப்பிடும் வேலையும் இருந்திருக்காது, அவரே ஊட்டிவிட்டிருப்பார். இப்பொழுது நிலைமை மாறியிருக்கும் குழந்தையை கவனித்து கொள்ளவே நேரம் சரியாய் இருக்கும். அதுமட்டுமின்றி ஆரோக்கியத்தை காரணமாய் காட்டி உங்களுக்கு பிடித்த உணவுகளை உண்ண தடைவிதிப்பார்கள்.

சுவாரஸ்யம்

சுவாரஸ்யம்

நீங்கள் கர்ப்பமாய் இருப்பது உறுதியான காலத்திற்கும் அதை மற்றவர்களிடம் நீங்கள் மெல்ல சொல்லும் காலத்திற்கும் இடைப்பட்ட காலம் மிகவும் த்ரில் ஆனது. அந்த மகிழ்ச்சியான செய்தியை யாரிடம் முதலில் கூறலாம், எப்பொழுது கூறலாம், இனிப்பு கொடுத்து கூறலாமா என்று நீங்கள் தவிக்கும் தவிப்பு இனிமையானதாகும். ஆனால் பிரசவத்திற்கு பின் இந்த த்ரில் அனுபவம் உங்களுக்கு கிடைக்காது.

சலுகைகள்

சலுகைகள்

இந்த சுயநல உலகத்திலும் பிறர் மீது அக்கறை உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் உணரும் காலம் உங்களுடைய கர்ப்பகாலம்தான். பேருந்துகளில் பயணிக்கும்போது மற்றவர்கள் எழுந்து இடம் கொடுப்பது, அலுவலகத்திற்கு தாமதமாக சென்றாலும் யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள், வீட்டில் உங்களுடைய அனைத்து வேலைகளிலும் உதவி செய்ய குடும்பத்தார் வருவார்கள். இந்த சலுகைகளெல்லாம் இப்பொழுது கிடைக்க வாய்ப்புகள் இல்லை.

முகப்பொலிவு

முகப்பொலிவு

பலரும் அதிகம் மிஸ் செய்யும் ஒன்று முகப்பொலிவு. மற்ற நாட்களில் எவ்வளவு அழகுசாதன பொருட்கள் உபயோகித்தும் கிடைக்காத முகப்பொலிவு கர்ப்பகாலத்தில் எளிதாக வந்துவிடும். காரணம், உங்கள் மனதில் உள்ள மகிழ்ச்சி, புன்னகை அனைத்தும் உங்கள் முகத்தில் அப்பட்டமாக தெரியும். பிரசவத்திற்கு பின் மீண்டும் அழகுசாதன பொருட்களை நோக்கி மீண்டும் நகர வேண்டிய கவலை உங்களை தொற்றிக்கொள்ளும்.

கவனிப்பு

கவனிப்பு

கர்ப்பகாலத்தில் சாதரணமாக நீங்கள் நடந்து சென்றால் கூட பார்ப்பவர்கள் உங்களை பார்த்து ஒரு சிநேக புன்னகையை வீசுவார்கள். தெரிந்தவர்கள் அனைவரும் ” சரியாய் சாப்பிடுகிறாயா?”, “பிரசவ தேதி என்ன?”, ” என்ன குழந்தை வேண்டும்?” என்று மாறி மாறி விசாரிப்பார்கள். இவை அனைத்தும் இப்பொழுது மாறியிருக்கும், உங்களுக்கு கிடைத்த கவனிப்புகள் அனைத்தும் இப்பொழுது உங்கள் குழந்தைக்கு சென்றிருக்கும், அதுவும் உங்களுக்கு மகிழ்ச்சியானதுதானே.

குழந்தையின் உதை

குழந்தையின் உதை

வயிற்றுக்குள் குழந்தையின் நகர்தலை உணர்வதை விட அழகிய உணர்வு இந்த உலகில் இருக்கு முடியாது. அதுவும் உங்கள் செல்ல குழந்தை மகிழ்ச்சியை இருந்தால் சில உதைகளை கூட பரிசாக கொடுத்திருப்பார்கள். நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் கிடைக்கும் உதை உங்கள் முகத்தில் ஒரு உடனடி மகிழ்ச்சியை கொண்டுவந்திருக்கும். உங்கள் கணவர் குழந்தை நகர்வதை தொட்டு பார்க்க ஏக்கத்துடன் காத்திருந்து கொண்டிருப்பார். இந்த ஏக்கம், மகிழ்ச்சி எல்லாம் இப்பொழுது இருக்காது.

நீளமான கூந்தல்

நீளமான கூந்தல்

சில பெண்களுக்கு பல ஆயிரங்கள் செலவழித்தும் கிடைக்காத நீளமான கூந்தல் கர்ப்பகாலத்தில் கூடுதல் ஹார்மோன்கள் சுரப்பால் எளிதாக கிடைக்கும். இது கர்ப்பகாலத்தில் கிடைக்கும் பல பரிசுகளுடன் கிடைக்கும் ஒரு இலவச இணைப்பாகும்.

மாதவிடாய்

மாதவிடாய்

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய ஆறுதல் மாதவிடாய் பிரச்சினையாகும். இதுவே அவர்களை மகிழ்ச்சியாகவும்,சுறுசுறுப்பாகவும் இருக்க செய்யும். ஆனால் இப்பொழுது மீண்டும் அந்த கவலை அவர்களை தொற்றிக்கொள்ளும்.

ஓய்வு

ஓய்வு

நீங்கள் மிகவும் தவறவிடும் ஒன்று. காரணம் கர்ப்பகாலத்தில் உங்களுக்கு இருந்த வேலைகள் மிகக்குறைவு. சாப்பிடுவது, சின்ன சின்ன வேலைகளை தவிர மீதிநேரம் முழுவதும் உங்களுக்கு இருந்த ஒரே வேலை ஓய்வெடுப்பதாகத்தான் இருந்திருக்கும். நீங்களே வேலை செய்ய முயன்றாலும் உடனிருப்பவர்கள் தடுத்திருப்பார்கள். ஆனால் இப்பொழுது உங்களுக்கு ஓய்வெடுக்க நேரமே இருக்காது, குறிப்பாக உங்கள் குழந்தை பெரும்பாலும் இரவில் தூங்க விடவேமாட்டார்கள்.

முடிந்தவரை கணவர்கள் அவர்கள் இவை எதையும் ‘மிஸ்’ செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு குழந்தை பிறந்திருந்தாலும் உங்கள் மனைவிதான் உங்களுடைய முதல் குழந்தை என்பதை மறந்துவிடாதீர்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker