சமையல் குறிப்புகள்புதியவை
சூப்பரான ஸ்நாக்ஸ் பொட்டுக்கடலை உருண்டை
தேவையான பொருட்கள் :
பொட்டுக்கடலை – ஒரு கப்,
பாகு வெல்லம் – முக்கால் கப்,
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,
நெய் – சிறிதளவு.
செய்முறை :
வெல்லத்தில் நீர் விட்டு கரைத்து, அடுப்பில் ஏற்றி, கொதிவந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு தயாரிக்கவும்.
பாகுடன் பொட்டுக்கடலை, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துக் கலந்து இளம் சூடாக இருக்கும் போதே உருண்டைகளாக பிடிக்கவும்.
சூப்பரான இரும்பு சத்து நிறைந்த பொட்டுக்கடலை உருண்டை ரெடி.
இதை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து அதிக நாட்கள் உபயோகிக்கலாம்.