பெண்கள் விரும்பும் கோல்டு வேக்ஸிங்
அதிகப்படியான வேண்டாத ரோமங்களை நீக்கும் முறையையே வேக்ஸிங் என்கிறோம். இது காலம் காலமாகப் பயன்படுத்தும் முறைதான். இன்றைய தலைமுறையினர் பலரும் வேக்ஸிங்கை தவிர்க்காமல் செய்கின்றனர். வேக்ஸ் பயன்படுத்துவதால், முடி கொஞ்சம் லேட்டாக வளர ஆரம்பிக்கும்.
பெரும்பாலானோர் கிரீம் மூலம் ரிமூவ் செய்வதையே விரும்புகிறார்கள். கை மற்றும் கால் முடியை நீக்குவதற்கு இந்த வகை வேக்ஸ்தான் சிறந்தது. கிரீம் மூலம் வேக்ஸ் செய்வதில் பல வகைகள் உண்டு. அதில் ஒன்றுதான் கோல்டு வேக்ஸ்.
சாதாரணமாக, ஜெல் மூலமாக வேக்ஸ் செய்யும்போது அதனைச் சூடுபடுத்தி கை, கால்களில் அப்ளை செய்ய வேண்டும். ஆனால், இந்த வகை கோல்டு வேக்ஸைப் பயன்படுத்தும்போது சூடுபடுத்த தேவையில்லை. நேரடியாகவே கை, கால்களில் அப்ளை செய்துகொள்ளலாம். வெளியூர் செல்லும் நேரங்களில் கையோடு ஹீட்டரைக் கொண்டுசெல்ல முடியாது. அந்த நேரத்தில், இந்த வகை வேக்ஸ் உதவியாக இருக்கும். கோல்டு வேக்ஸ் செமி சாலிடாக இருப்பதால், பலரும் இதை விரும்புகிறார்கள்.
முதலில், சூடான நீரில் காட்டன் துணியை நனைத்து, கையைச் சுத்தம் செய்துகொள்ளவும். பின்னர், சாதாரணமாக முகத்துக்குப் பயன்படுத்தும் பவுடரை கையில் தடவிக்கொள்ளவும். அதன்மீது, கோல்டு வேக்ஸ் அப்ளை செய்துகொள்ளவும்.பின்னர், ஸ்டிரைப் பயன்படுத்தி எதிர்புறமாக வேக்ஸை ரிமூவ் செய்யவும்.
இந்த கோல்டு வேக்ஸில் எலுமிச்சை ஜூஸ், குளுக்கோஸ் போன்றவை கலந்துள்ளது. சாதாரண வேக்ஸ் ஜெல்லுடன் ஒப்பிடும்போது, இதன் விலை சற்று அதிகம்.
வேக்ஸ் தேர்வு:
டிரை ஸ்கின் – சாக்லேட், ஸ்டாபெர்ரி
மிகவும் டிரை ஸ்கின் – கோக்கோனெட், ஆலிவ் ஆயில்
சென்சிட்டிவ் – தேன், மில்க், ஆலோவேரா, கிரீன் ஆப்பிள்
அன்டர் ஆர்ம், பிகினி – பிரேசிலியன் வேக்ஸ்
லக்சரி ( luxury) – கோல்டு, பியர்ல்
ரிலாக்ஸிங் – டால்கம்
எச்சரிக்கை:
வேக்ஸை நீங்களே செய்துகொள்ளாமல், புரொபஷனல்கிட்ட கத்துக்கிட்டு பண்ணனும். முகத்துக்கு தனி வேக்ஸ் இருக்கு. ஆனால், நார்மலா ஃபேஸ் வாக்ஸ் பண்ணவே கூடாது. உடம்புக்கு போடுறதை முகத்துக்குப் போடக்கூடாது. சென்சிட்டிவ் ஸ்கின்னுக்கு என இருக்கும் வேக்ஸைப் பயன்படுத்தணும்.