மூட்டு வலிக்கு ஆய்வு ரீதியான உதவிகள்
மூட்டு வலிக்கு வீட்டிலேயே செய்து கொள்ள கூடிய சில ஆய்வு ரீதியான உதவிகள்:
* இஞ்சிக்கு மருத்துவத்தில் அதிக முக்கியத்துவம் உள்ளது. ஏதோ ஒரு விதத்தில் சமையலில் இஞ்சி சேர்த்துக் கொள்ளுங்கள். சில மெல்லிய துண்டுகள் இஞ்சியினை 2 கப் நீர் 15 நிமிடங்கள் மெல்லிய தீயில் கொதிக்க விட்டு வடிகட்டி அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துங்கள்.
* சோம்பு, பூண்டு இவற்றினை உணவில் சேருங்கள்.
* கைகளுக்கு, விரல்களுக்கு வேலை கொடுங்கள். முதலில் வெதுவெதுப்பான நீரில் கையை வையுங்கள். பின்னர் சிறு சிறு சாமான்களான தட்டு, டம்ளர் இவற்றினை நீங்களே நன்கு சுத்தம் செய்யுங்கள். வலியும் குறையும். வேலை செய்வதால் உங்கள் தன்னம்பிக்கை கூடும்.
* தவிடு ஒத்தடம், வெந்நீர் ஒத்தடம் இவைகளை வீட்டிலேயே செய்து கொள்ளலாமே.
* காய்கறி, முழு தானியம், பழங்கள், வெங்காயம், மீன் இவை வீக்கத்தினை குறைக்கும் உணவுகள் ஆகும்.
* முடிந்தால் நீச்சல் செய்யுங்கள்.
* க்ரீன் டீ 2 கப் தினமும் சாப்பிடுங்கள்.
* எலுமிச்சை, நெல்லி அதாவது வைட்டமின் ‘சி’ சத்து தினமும் தேவை.
* சாப்பிட்ட பிறகு ஒரு கிராம்பு மெல்லுங்கள்.
* ஓமேகா 3 மருத்துவ ஆலோசனை படி எடுத்துக் கொள்ளுங்கள்.
* வீட்டினுள் வெறும் காலில் நனங்கள்.
* கால்ஷியம் மாத்திரை தேவையா என்பதனைப் பற்றி மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
ஓமம்:- ஆங்கில முறை மருத்துவம் என்றால் அதில் அறிவுறுத்தும் உணவு நிபுணர்கள் பூண்டு, மஞ்சள் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வலியுறுத்துகின்றனர். அவ்வகையில் ஓமம் இன்று அறிவுறுத்தப்படுகின்றது. இதன் மருத்துவ குணங்களான கிருமி நாசினியும், பூஞ்ஞை நாசினியும் வெகுவாய் மருத்துவ உலகம் அறிந்து சிபாரிசு செய்கின்றது. இதனை டீ போல் நீரில் கொதிக்க வைத்து குடிக்க
* சிறுநீர் நன்கு செல்லுதல் (ஆனால் சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று செய்யவும்)
* பல் பாதிப்பின்மை
* ஜீரணம் சீராய் இருத்தல்
* மனச் சோர்வின்றி இருத்தல்
* உடல்வலி இன்றி இருத்தல்
* உள் வீக்கங்கள் குறைதல்
ஆகியவை ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.
2 க்ளாஸ் நீரில் 1/2 டீஸ்பூன் ஓமம் போட்டு டீ போல் கொதிக்க வைத்து வாரம் இரு முறை டீக்கு பதிலாக அருந்தலாமே.