சத்தான ஒட்ஸ் – சம்பா ரவை இட்லி
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் – 1 கப்
சம்பா ரவை – அரை கப்
தயிர் – கால் கப்
சோடா மாவு – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
தாளிக்க
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு – தலா அரை டீஸ்பூன்
ப.மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி – சிறிய துண்டு
செய்முறை
கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் ஓட்ஸை போட்டு 5 நிமிடங்கள் வறுத்து ஆறியதும் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்த பின்னர் சம்பா ரவையை போட்டு 5 நிமிடங்கள் வறுக்கவும்.
அடுத்து அதில் பொடித்த ஓட்ஸ் சேர்த்து சிறிது கிளறிய பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.
பிறகு அதில் சோடா மாவு, தயிர், 1 1/2 தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். கலவை இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
அடுத்து அதில் உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.
இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவிய பின்னர் அதில் மாவை ஊற்றி ஆவியில் 20 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.