தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

பிறந்த குழந்தைகளை எவ்வாறு ஆரோக்கியமாக குளிக்க வைப்பது?

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணையை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித் தேய்க்கணும். குழந்தை தலையிலேயும். உடம்பிலேயும் தேய்க்கக் தேவையான அளவு சுத்தமான தேங்காயெண்ணையைக் காயவைத்து அதில் 1 மேசைக் கரண்டி தேங்காய்ப்பால் சேருங்கள். அது படபடன்னு கொதிச்சு அடங்கினதும் 1 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் பொடியைப் போட்டு இறக்க வேண்டும். குழந்தைக்கு 1 வயது வரை இந்த எண்ணையைத்தான் தேய்க்கணும். ஆனால் இந்த எண்ணெய் நல்லாப் போற மாதிரி பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளிக்க வைக்கவேண்டும். இப்படிச் செய்து வந்தால் குழந்தைக்கு உடம்பில் சொறி. சிரங்குன்னு எதுவும் வராமல் மேனி பட்டுப் போல் இருக்கும்.

 

 

 

 

 

பொதுவா குழந்தைக்கு நாலு வயசாகறவரை தலைக்கு தேங்காயெண்ணை தேய்த்துக் குளிக்க வைப்பது தான் சிறந்தது. நல்லெண்ணை குளியல் வேண்டாம். முன்னெல்லாம் ஃப்ரெஷ்ஷா தேங்காய்ப்பால் எடுத்து காய்ச்சி எண்ணெய் எடுத்து குழந்தைக்கு தேய்ச்சுக் குளிக்க வைப்போம். இப்பவும் சில பேர் அப்படித்தான் செய்கிறார்கள். அதுதான் குழந்தையில் இருந்தே அவங்க சருமமும் தலைமுடியும் பட்டுப்போல இருக்கிறது. ஆனால் இந்தக் காலத்துல உடனுக்குடன் எண்ணெய் எடுப்பது நடக்கிற காரியமா? அதுக்குப் பதிலாக நல்ல தேங்காயெண்ணெய் ரெண்டு கரண்டி அளவுக்கு எடுத்து. சுட வைத்து அதில் கால் கரண்டி தேங்காய்ப்பாலும் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளும் போட்டா. தேங்காய்ப்பால் சடசடங்கற கத்தத்தோட முறிஞ்சு ஃப்ரெஷ் தேங்காயெண்ணெயாக கமகமனு மணக்கும். இதை குழந்தையோட தலை. உடம்புனு முழுக்கப்பூசி குளிப்பாட்டினா நன்றாக இருக்கும்.

 

 

 

 

 

எண்ணைப்பசை போக சீயக்காயெல்லாம் போடக்கூடாது. பாசிப்பயறு அல்லது கடலை மாவு தேய்ச்சுக் குளிப்பாட்டினாலே எண்ணைப்பசை போய் விடும். இப்பிடி குளிக்க வைத்தால் குழந்தைக்கு கரப்பான், சொரி, சிரங்கு மாதிரியான சரும வியாதிகள் எதுவும் பக்கத்துலேயும் வராது.

வெயில் காலத்துல ஒரு பக்கெட் நீரில் ஒரு கொத்து வேப்பிலை போட்டு சூரிய வெப்பத்துலே வெச்சு வெப்பமாக்கினால் அந்தத் தண்ணீரில் குளிக்க வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். குழந்தைகள் தலைக்குக் குளிக்கும் நீரில் வேப்பிலை போட்டுக் குளிப்பாட்டுவது நல்லது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker