ஆரோக்கியம்புதியவை

இடுப்பு, முதுகெலும்புக்கு பலம் தரும் ஹஸ்த உத்தானாசனம்

இந்த ஆசனம் தோள்பட்டை, கழுத்து, மார்பு, வயிறு, இடுப்பு, முதுகெலும்புக்கு பலம் கிடைக்கும். இன்று இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

செய்முறை : பத்தாம் நிலையிலிருந்து நேராக நிமிர்ந்து கைகளை மேலே உயர்த்தவும். அதே சமயம் இடுப்பிலிருந்து தலைவரைக்கும் உள்ள உடல் பகுதியை பின்பக்கமாக வளைத்து மூச்சை உள்ளே இழுக்கவும்.

 

 

 

கவனம் செலுத்த வேண்டிய இடம் : முதுகை வளைப்பதின் மீதும், விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

பயிற்சிக் குறிப்பு : மேலே உயர்த்திய கைகளை அதிகமாக அகற்றாமல் உங்கள் புஜ அளவில் வைக்கவும். ஆரம்பப் பயிற்சியில் முதுகை பின்னால் அதிகமாக வளைக்க முடியாதவர்கள் முடிந்த அளவு முதுகை வளைத்து செய்யவும். இப்பயிற்சியில் பின்நோக்கி முதுகை வளைக்கும் போது முழங்கால்களை மடக்கக் கூடாது. 

தடைகுறிப்பு : பலகீனமான இருதயம் உடையவர்கள் தலைசுற்றல் போன்ற தொந்தரவு உள்ளவர்கள் அதிகமாக பின் வளைந்து செய்யக்கூடாது.

 

 

 

பயன்கள் : தோள்பட்டை, கழுத்து, மார்பு, வயிறு, இடுப்பு, முதுகெலும்பு பலம் பெறும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker