காதலியின் பெற்றோரை சந்திக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை
காதலர்கள் தங்கள் காதல் வாழ்க்கையை திருமண வாழ்க்கையாக மாற்ற நினைக்கும்போது அவர்கள் எதிர்கொள்ளும் முதல் பிரச்சனை பெற்றோர்களின் சம்மதத்தைப் பெறுவது.
காதலர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டாலும், தங்கள் காதல் வாழ்க்கையை திருமண வாழ்க்கையாக மாற்ற நினைக்கும்போது அவர்கள் எதிர்கொள்ளும் முதல் பிரச்சனை பெற்றோர்களின் சம்மதத்தைப் பெறுவது.
பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் மகளை திருமணம் செய்யும் ஆண், நல்லவராக இருக்க வேண்டும், நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். அவர்கள் தங்கள் மகளின் காதலன் மீது ஆரம்பத்தில் தவறான எண்ணத்தையே வைத்திருப்பார்கள். இதனால், பெண்ணின் பெற்றோர் உடனான முதல் சந்திப்பு என்பது மிகவும் முக்கியமானது. அதில் அவர்களை எப்படி கவர்வது என்பதை இதில் தெரிந்து கொள்ளுங்கள்.
நேரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உங்களுக்காக அவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பது அவ்வளவு நல்லதல்ல. அது முதல் பார்வையிலேயே உங்களைப் பற்றிய தவறான புரிதலை உண்டாக்கும்
உங்கள் டிரசிங் நீங்கள் யார் என்பதை பிரதிபலிக்கும் ஒரு அம்சம். அதனால், முடிந்த வரை நேர்த்தியான உடையில் அவர்களை சந்திக்கவும்.
உணவு உண்ணும் போது முடிந்த வரையில் மிகவும் பொறுமையாக, நாகரீகமாகவும் உணவு உட்கொள்ளவும்.
அதிகமாக உணவு உட்கொள்வது உங்களைத் தவறான கண்ணோட்டத்தில் காண செய்யும். குறைந்தளவு மட்டும் உண்பது உங்களை கூச்ச உணர்வு கொண்டவராகக் காட்டும்.
பெற்றோரின் முன் அவர்களின் மகளை மரியாதையுடன் நடத்துங்கள். அப்போதுதான் அவர்களுக்கு உங்கள் மீது ஒரு நம்பிக்கை உண்டாகும்.
உங்கள் காதலியின் பெற்றோருடன் பேசி முடித்தவுடன், அங்கிருந்து சரியான நேரத்தில் கிளம்பவும். அவர்களின் நேரத்தை வீணடிக்கவோ அல்லது அங்கிருந்து அவர்களே கிளம்ப வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு வைத்துக்கொள்ள வேண்டாம்.