ஃபேஷன்அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்புதியவை

முகத்தை உடனடியாக ஜெலிக்க வைக்க வேண்டுமா… அப்போ காபி பொடி இருந்தா போதும்

பொதுவாகவே காபியின் மணமும், சுவையும் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். மனிதர்களை அடிமையாக்கி வைத்திருக்கும் பொருட்களுள் காபிக்கு முக்கிய இடம் உண்டு.

இதற்கு காரணம் காபியில் இருக்கும் காபீன் எனும் வேதிப்பொருள், இது உடலுக்கு புத்துணர்வு வழங்கக் கூடியதென்பது நாம் அறிந்ததே. ஆனால் காபி பொடியை வைத்து முகத்தை பளபளவென ஜொலிக்க வைக்க முடியுமாம்.

பொதுவாகவே பெண்களுக்கு தங்களை அழகுப் படுத்திக்கொள்வதில் அலாதி இன்பம் இருக்கின்றது. காபி பொடி சர்ம அழகை பராமரிப்பதில் எவ்வாறு துணைப்புரிகின்றது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அந்த வகையில் காபியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக காணப்படுகின்றன.இதனால் தான் பெரும்பாலான அழகுசாதன பொருட்களில் காபியை ஒரு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றது.

பாக்டீரியா தொற்றுக்களினால் ஏற்படும் முகப்பரு பிரச்சினை மற்றும் முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகளுக்கு காபியை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட சர்ம பாதுகாப்பு உற்பத்திகள் மிக சிறந்த தீர்வாக காணப்பபடும்.

தினமும் காபி பொடியுடன் சிறிதளவு தேன் மற்றும் சீனி சேர்த்து முகத்தில் லேசாக மசாஜ் செய்துவிட்டு, குளிர்ந்த நீரினால், முகம் குழுவினால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி முகம் உடனடி பொலிவு பெறுவதை அவதானிக்க முடியும். காபியில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் புறஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கின்றது.

இது சருமத்தில் உள்ள மெலனின் நிறமியைக் குறைக்க உதவுகிறது. இதனால் சர்மம் இயற்கை சிகப்பழகு பெறுவதற்கு காபி துணைப்புரிகின்றது. காபி தூளில் இருக்கும் மூலப் பொருட்கள் முகத்திற்கு பல நன்மைகளை வழங்குகின்றன.

அதனை தினசரி பயன்படுத்துவதன் மூலம் முகப்பருக்கள் வராமல் தவிர்க்கலாம்.மேலும் காபி பொடி எவ்வித பாதகமும் இல்லாத இயற்கை பொருள் என்பதனால் பக்க விளைவுகள் குறித்து எந்த பயமும் இல்லாமல் இதனை பயன்படுத்தலாம்.

நமது மனநிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் அதை ஒரு கப் காபி சரிசெய்துவிடும். அதுபோல தான் முகத்தில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் காபி பொடி மூலம் அதனை இலகுவில் சீர்செய்து விடலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker