கை விரல்கள், மணிக்கட்டுகளுக்கு வலிமை தரும் த்வி பாத ப்ரசரணாசனம்
கைகள், குறிப்பாக கை விரல்கள், மணிக்கட்டுகள் புஜம், தோள்பட்டை வலிமை தரும் ஆசனம் இது. இன்று இந்த ஆசனத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பெயர் விளக்கம் : ‘த்வி’என்றால் இரண்டு என்றும் ‘பாத’ என்றால் பாதம் என்றும் ‘ப்ரசரணா’ என்றால் நீட்டி வைத்தல் என்றும் பொருள். இரண்டு கால் பாதங்களையும் நீட்டி வைத்திருப்பதால் இந்த ஆசனத்திற்கு ‘தவி பாத ப்ரசரணாசனம் என்று பெயர் அமைந்துள்ளது.
செய்முறை : நான்காம் நிலையில் உள்ளுக்குள் இழுத்த மூச்சை வெளியேவிடாமல் அடக்கி மற்றொரு காலையும் பின்நோக்கி நீட்டி வைத்திருந்த, காலோடு சேர்த்து வைத்து இரண்டு முழங்கால்களையும் மேலே தூக்கவும். கைகள் நேராக இருக்கட்டும். உடலின் பாரத்தை கைகளாலும், கால் விரல்களாலும் தாங்கிக் கொள்ளவும் மந்திரத்தைக் கூறி சக்கரத்தை நினைக்கவும்.
கவனம் செலுத்த வேண்டிய இடம் : உடல் எடையை சமநிலைப்படுத்துவதின் மீதும் ஆக்ஞா சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக் குறிப்பு : தலையில் இருந்து குதிகால் வரை உள்ள உடல் பகுதி சற்று சாய்ந்த நிலையில் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். மார்பு மற்றும் பிருஷ்டத்தை மேலே உயர்த்தவோ கீழே இறக்கவோ கூடாது.
பயன்கள் : கைகள், குறிப்பாக கை விரல்கள், மணிக்கட்டுகள் புஜம், தோள்பட்டை வலிமை அடையும்.